கடச்சனேந்தல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கடச்சனேந்தல் (ஆங்கிலம்: Kadachanendhal) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] கடைச் சிலம்பு ஏந்தல் என்ற பெயரே மருவி கடச்சனேந்தல் என்றாகி விட்டது. சிலப்பதிகாரத்தில், கோவலன் மற்றும் அவரது மனைவி கண்ணகி, சமணத் துறவி கவுந்தியடிகளால் மதுரைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, முதல் நாள் தங்க வைக்கப்பட்ட இடமே இந்த கடச்சனேந்தல் ஆகும்.[5] மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதிக்கு அருகில் ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கி மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்.[6]

விரைவான உண்மைகள் கடச்சனேந்தல்Kadachanendhal கடைச் சிலம்பு ஏந்தல், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 187 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9.9776°N 78.1703°E / 9.9776; 78.1703 ஆகும்.

மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை கடச்சனேந்தல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ளது.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads