ஊமச்சிகுளம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊமச்சிகுளம் (ஆங்கிலம்: Oomachikulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 172 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊமச்சிகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.994200°N 78.145800°E ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம், கோ. புதூர், கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை ஊமச்சிகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி வரை, 35 கி.மீ. நீளத்தில் ரூ.1,028 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதன் ஒரு கட்டமாக தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ. தூரத்தில் ரூ.612 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.[2] மேலும், மதுரையிலிருந்து நத்தம் வழியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் துவரங்குறிச்சி பகுதியை இணைக்கும் வண்ணம் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊமச்சிகுளம் கண்மாய் கரைகளை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.[3] ஊமச்சிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் உயர்மட்டப் பாதை கொண்டது.[4] மேலும் இச்சாலையில் குறுகிய இடைவெளிகளில் அதிகளவில் மையத்திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.[5] இந்த நான்கு வழிச் சாலை, தமிழகத்திலேயே மிக நீளமான சாலையாக அமைவதுடன், பயண தூரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads