கடுகண்ணாவை
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடுகண்ணாவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் ஒரு நகரம் ஆகும். இது யட்டிநுவரை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் மலைநாட்டுக்கு நுழையும் கணவாய் கடுகண்ணாவையில் அமைந்துள்ளது. இந்நகரம் கண்டி இராச்சியத்தின் காலத்தில் முக்கிய நுழவாயிலாகவும் பாதுகாப்பு கோட்டையாகவும் விளங்கியது. மிகவும் கடினமான புவியியல் அமைப்பைக் கொண்ட இப்பகுதியூடாக இரயில் மற்றும் பெருந்தெருவை அமைத்த ஆங்கிலேய பொறியியலாளர் டாவ்சன் என்பவரை கௌரவிக்கும் வகையில் இங்கு ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
புவியியலும் காலநிலையும்
கடுகண்ணாவை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரமாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
Remove ads
போக்குவத்து
இது கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கேகாலைக்கும் பிலிமத்தலாவை நகருக்கும் இடையில் கொழுபில் இருந்து 101 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு - பேராதனை - பதுளை பாதையில் பலனை, பிலிமத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. இந்நகரை உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே தொடருந்துகள் மூலம் அடையலாம்.
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads