கடைக்குட்டி சிங்கம் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடைக்குட்டி சிங்கம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 11 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான காதல், பாசம், குடும்பம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இத்தொடரில் பகல் நிலவு தொடரில் நடித்த முஹம்மட் அஸீம் மற்றும் கண்மணி தொடரில் நடித்த இரா அகர்வால் இருவரும் மருது மற்றும் மீனாட்சி என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், அண்ணன் முத்து கதாபாத்திரத்தில் வேலு லட்சுமணன் என்ற புதுமுக நடிகர் நடித்துள்ளார்.[1] 20 ஜூலை 2019ஆம் ஆண்டு அன்று 113 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது என்ற இரு பாசக்கார அண்ணன் தம்பிகளுக்குள் மீனாட்சி என்னும் அழகான பெண் வரும்போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை சொல்லபடுக்குகின்றது. இத் தொடரை ரவி பிரியன் இயக்கியுள்ளார்.
Remove ads
கதைச்சுருக்கம்
முத்து (வேலு லட்சுமணன்), மருது (முகம்மது அஸீம்), எனும் இரு பாசக்கார அண்ணன் தம்பிகள். அண்ணன் முத்துவுக்கு மீனாட்சி (இரா அகர்வால்/ஷிவானி நாராயணன்) என்னும் அழகான கனிவான இதயம் கொண்ட பெண்ணை நிச்சயிக்க முடிவு செய்கின்றார்கள். ஆனால், முத்து, மீனாட்சியிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை நீங்கள் தன இந்த திருமணத்தை நிறுத்தனமும் என்று சொல்ல இதனால் மீனாட்சி தனக்கு முத்துவை பிடிக்கல என்று சொல்லுகின்றார்.
இது பற்றி தெரியாத மருது, தன் அண்ணனை வேண்டாம் என்று சொன்ன மீனாட்சி மீது கோபம் கொண்டு அவருக்குத் பல தொல்லைகள் கொடுக்கிறார். அதைக் பொறுத்து கொண்டு உண்மையை சொல்லாமல் இருக்கிறார் மீனாட்சி. மருது அந்த உண்மை தெரியும்போது அதன்பின் நடக்கப் போகும் பரபரப்பான சம்பவங்கள் மையமாக வைத்து இந்த தொடர் நகர்கின்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஷிவானி நாராயணன் (பகுதி:1-17) → இரா அகர்வால் (பகுதி:18-) - மீனாட்சி
- முகம்மது அஸீம் - மருது
- வேலு லட்சுமணன் - முத்து
துணை கதாபாத்திரங்கள்
- ஷர்மிளா
- சிவாங்கலா - நளினிகாந்த் (மருதையின் தந்தை)
- கே. நட்ராஜ்
- சுமங்கலி
- மணி கே. எல்.
- டேவிட் சாலமன் ராஜா
- அனுபாகன் "அம்பு"
- மீனாட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads