கண்மணி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018 முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]
இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் மற்றும் சன் என்டர்டெயின்மெண்ட் இணைத்து தயாரிக்க, பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 28 நவம்பர் 2020 அன்று 536 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. 2019 ஆம் ஆண்டு சன் குடும்ப விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த ஜோடி, சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
தர்மதுரை குடும்பத்தினர்
- எல். ராஜா - தர்மதுரை (2018-2019) விஜியின் கணவர் (தொடரில் இறந்து விட்டார்)
- பூர்ணிமா - விஜி
- பிரியா பிரின்ஸ் → சௌமியா - சுகன்யா (மூத்த மகள்)
- பத்மினி → பரணி - சரண்யா (இரண்டாவது மகள்)
- ஈரா அகர்வால் (1-112) → ஜனனி பிரதீப் (113-) - வனாதி (2018-2019)
முத்துச்செல்வி குடும்பத்தினர்
- ராஜசேகர் - வீரய்யா (தந்தை)
- கீர்த்திகா - தங்க செல்வி (சகோதரி)
ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்
- சாந்தி வில்லியம்ஸ் - தமிழ் செல்வி (தாய்)
துணை கதாபாத்திரம்
- டி. ஆர். ஓமனா
- பிரேமி வெங்கட் - கிருஷ்ணவேணி
- விந்துஜா விக்ரமன்
- பாரதி கண்ணன்
- தில்லா
- விஷ்வேஷ்வர் ராவ்
- சிவகுமார்
- அனிதா நாயர்
- ஸ்ரீ பிரியா
- ஐயப்பன் கிருஷ்ணா
- ஜிஷ்ணு மேனன்
- ஆனந்த் செல்வம்
- மங்களா நாதன்
- நீலயா பவானி
- அனன்யா
- நவீன்
- அஞ்சலி ராவ்
சிறப்புத் தோற்றம்
- சந்தியா (455-467)
- அமித் பார்கவ் (455-467)
- சுப்புலட்சுமி - கார்த்திகா (455-467)
- ராஜீவேலு (455-467)
Remove ads
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் 22 அக்டோபர் 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
Remove ads
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
Remove ads
வெளி இணைப்புகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads