பீலிக்கணவாய்
மெல்லுடலி வரிசை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீலிக்கணவாய் (squid) என்பது தலைக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த கணவாய் வடிவி என்ற பெருவரிசையில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினம் ஆகும். இது மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கணவாய் இனங்கள் 60 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை என்றாலும் சிலவகை கணவாய்கள் 13 மீட்டர் வரை வளரக்கூடியவை. இது மிகவும் பிரபலமான உணவாகும்.மேற்கத்திய நாடுகளில் இது கலமாரி என்ற இத்தாலியன் பெயரால் அழைக்கப்படுகின்றது. கணவாய் என்பது ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்றழைக்கப் படுவது.
கணவாய்களை கடல்வாழ் பச்சோந்தி என்று சொல்வதும் உண்டு. காரணம் இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள கோலங்களையும் வண்ணங்களையும் சுற்றுப் புறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவை.
கணவாய்களை எதிரிகள் (டால்ஃபின், சுறா மீன் போன்றவை) துரத்தும் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை நிறம் கொண்ட திரவத்தினை கடலில் பாய்ச்சும். பெரிய கணவாய் கருப்பு நிற திரவத்தினையும், ஊசிக் கணவாய் நீல நிற திரவத்தினையும். கணவாய் பழுப்பு நிற திரவத்தினையும்,வெளி விடும்.
கணவாயின் கண்ணில் உள்ள கருவிழி சற்று வினோதமானது. பல உயிரினங்களின் கண்ணில் கரு விழிகள் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் கணவாயின் கரு விழி டபிள்யூ (W) என்னும் ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads