கணேஷ் – வசந்த்

கதையில் வரும் வழக்கறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கணேஷ் – வசந்த் ஆகிய இருவரும் தமிழ் எழுத்தாளரான சுஜாதா எழுதிய தமிழ் குற்றப்புனைவு புதினங்களில் வரும் பாத்திரங்கள் ஆவர்.[1] 1968 ஆம் ஆண்டு புதினமான நைலான் கயிறு புதினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கணேஷ், ஒரு தலைசிறந்த மூத்த வழக்கறிஞர் ஆவார். அவர் முக்கியமாக 1973 ஆம் ஆண்டு பிரியா புதினத்தைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட அவரது ஊர்சுற்றியான இளம் உதவி வழக்கறிஞர் வசந்த் உடன் தோன்றுவார்.[2]

விரைவான உண்மைகள் கணேஷ் – வசந்த், உருவாக்கியவர் ...
Remove ads

இரண்டு நபர் இணை

கணேஷ் ஒரு மூத்த வழக்கறிஞர், வசந்த் ஊர்சுற்றியான அவரது துணை வழக்கறிஞர்.[3] கணேஷ்-வசந்த் ஜேம்ஸ் ஹாட்லி சேசின் கதாப்பாத்திரங்களான விக் மல்லாய் மற்றும் அவரது உதவியாளரை அடிப்படையாகக் கொண்டது. கணேசுக்கு முதலில் பெண் உதவியாளராக நீரஜா இருந்தார், ஆனால் பின்னர் கணேசுக்கு வசந்த் உதவியாளராக வந்தார்.[4] கணேஷ், வசந்த் ஆகியோரின் சரியான வயதை ஆசிரியர் குறிப்பிடவில்லை. இருவரின் வயதும் இருபதுகளுக்கு கூடுதலாகவும் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் என்றும் வசந்த் கணேசை விட கொஞ்சம் இளையவர் என்றும் கருதப்படுகிறது. இருவரின் திருமண நிலை எந்த புதினத்திலும் குறிப்பிடப்படவில்லை. 2000 களின் முற்பகுதியில் ஆசிரியரின் கடைசி சில நேர்காணல்களின்படி, வசந்த் ஒரு திருமணமாகா வாலிபர் என்றும் தனக்கேற்ற மணமகளைத் தேடுபவர் என்றார்.

கணேஷ் ஒரு கருத்தார்ந்த நபராக சித்தரிக்கப்படுகிறார், வசந்த் நகைச்சுவை உணர்வு மிக்க, அதேசமயம் புத்திசாலி மனிதராக சித்தரிக்கபடுகிறார். அவர் தன் முதலாளி கணேசின் வலது கையாக உள்ளார். வசந்த் பெண்களுடன் சுற்றுவதை விரும்புகிறவர். பெண்களை அவர்களை ஈர்க்க முயற்சிப்பவர் மேலும் அவர் வயது வந்தோருக்கான நகைச்சுவைகளை மிகவும் விரும்புகிறவர். அவர் தன் முதலாளியின் அறிவுறுத்தலின் பேரில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு துணிச்சலான பையனாகவும் காட்டப்படுகிறார்.

Remove ads

படைப்புகள்

இருவரும் தனியாகவும் ஒன்றாகவும் 25க்கும் மேற்பட்ட புதினங்களில் தோன்றியுள்ளனர். அவற்றில் பல கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

புதினங்கள்

  1. நைலான் கயிறு – தனி ஒருவராக கணேஷ்
  2. காயத்திரி
  3. பிரியா
  4. கொலையுதிர் காலம்
  5. பேசும் பொம்மைகள்
  6. இதன் பெயரும் கொலை
  7. வசந்த்! வசந்த்!
  8. மறுபடியும் கணேஷ்
  9. மெரினா
  10. நிர்வாண நகரம்
  11. கொலை அரங்கம்
  12. ஐந்தாவது அதியாயம்
  13. ஆயிரத்தில் இருவர்
  14. நில்லுங்கள் ராஜாவே
  15. எதையும் ஒருமுறை
  16. ஓடாதே!
  17. மேகத்தை துரத்தியவன்– தனியாக வசந்த்
  18. மேற்கே ஒரு குற்றம்
  19. சில்வியா

சிறுகதைகள்

  1. "மாயா"
  2. "மேலும் ஒரு குற்றம்"
  3. "மீண்டும் ஒரு குற்றம்"
  4. "விதி"
  5. "பாதி ராஜ்யம்" – தனி ஒருவராக கணேஷ்
  6. "ஒரு விபத்தின் அனடோமி"– தனி ஒருவராக கணேஷ்
  7. "மலை மாளிகை"
  8. "மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"
  9. "விபரீத கோட்பாடு"
Remove ads

மற்ற ஊடகங்களில்

கணேஷ் முறையே காயத்ரி (1977) மற்றும் பிரியா (1978) படங்களில் ஜெய்சங்கர் மற்றும் இரசினிகாந்து ஆகியோரால் சித்தரிக்கப்பட்டார். [5] [6] சன் தொலைக்காட்சி தொடரான கணேஷ்-வசந்த் தொடரில், சுரேஷ் மற்றும் விஜய் ஆதிராஜ் இருவரும் இந்த இணை பாத்திரத்தை ஏற்று நடித்தனர். விஜய் தொலைக்காட்சி தொடரான விஜய் சித்திரத்தின் "கணேஷ் வசந்த்" பகுதியில், விஜய் ஆதிராஜ் மற்றும் அமித் குமார் இருவரும் நடித்தனர்.

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads