காயத்ரி (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[1]
Remove ads
கதை
திருச்சியில் வசிக்கும் பெண்ணான காயத்திரியை (ஸ்ரீதேவி) சென்னையில் வசிக்கும் பணக்காரரான ராஜரத்தினம் (ரஜினிகாந்த்) திருமணம் செய்து கொள்கிறார். ராஜரத்தினத்தின் சகோதரியாக வரும் சரசு திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணம் முடிந்தபிறகு காயத்திரி ராஜரத்தினத்தின் வீட்டிற்கு வந்து சேர்கிறார். ராஜரத்தினத்தின் குடும்பத்தில் இருண்ட ரகசியங்கள் இருப்பதை உணர்கிறாள்.
ராஜரத்தினம் உண்மையில் ஒரு நிலப்படத் தயாரிப்பாளர். ஒரு கட்டத்தில் இராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஏமாற்றி நீலப்படம் எடுத்து கறுப்பு சந்தையில் விற்பவர் என்றபது தெரியவருகிறது. மேலும் இராஜரத்தினத்திற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனதும், அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதும் தெரிகிறது. எழுத்தாளர் செல்லப்பாவின் நண்பரான கணேஷ், காயத்திரியை ராஜரத்தினத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- கணேசாக ஜெய்சங்கர் [2]
- இராஜரத்தினமாக இரசினிகாந்து [3]
- காயத்திரியாக ஸ்ரீதேவி [3]
- சரசுவாக ராஜசுலோசனா[3]
- காயத்திரியின் தாயாக எம். என். ராஜம்[4]
- இந்திராவாக இராஜீ
- இல்லிதாவாக இராஜேஸ்வரி
- சாமா ஐயராக எஸ். ஏ. அசோகன் [4]
- செல்லப்பாவாக வெண்ணிற ஆடை மூர்த்தி[2]
- காயத்திரியின் தந்தையாக டெல்லி குமார்
- டைகர் பிரபாகர்[5]
தயாரிப்பு
இப்படம் இதே பெயரிலான சுஜாதாவின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[6] இப்படம் அவசரநிலை காலத்தில் உருவானது.[2] திரைக்கதையை பஞ்சு அருணாசலம் எழுதினார்.[4]
இசை
பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைத்தார்.[7][8] சுஜாதா மோகன் இந்தப் படத்தின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[9] "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" பாடல் மேசகல்யாணி ராகத்திலும்,[10] "வாழ்வே மாயமா வெறும் கதையா" பாடல் தர்மவதியிலும் அமைக்கப்பட்டது.[11][12]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads