கண்ணகி
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் காப்பியத் தலைவி. From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் பண்டைய இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
Remove ads
பெயராய்வு
கள் போல் மயக்கும் சிரிப்பை[1] உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர்.
திருமாவுண்ணி
கண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள்.[சான்று தேவை]
கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள்.[2][3]
Remove ads
பரவலர் பண்பாட்டில்
1942 இல் ஆர். எஸ் மணி இயக்கிய கண்ணகி என்ற தமிழ்க் காவியத் திரைப்படம் வெளியானது. இதுவே சிலப்பதிகாரக் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். 1964 இல் இதே போன்ற இரண்டாவது படம் பூம்புகார் என்ற பெயரில் வெளியானது. சென்னை, மெரினா கடற்கரையில், சிலப்பதிகாரத்தின் காட்சியை சித்தரிக்கும் கண்ணகியின் உருவச் சிலை நிறுவப்பட்டது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி 2001 திசம்பரில் அகற்றப்பட்டது.[4][5] 2006 சூனில் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.[6][7]
பத்தினி என்ற சிங்களத் திரைப்படம் 5 மே 2016 அன்று இலங்கையில் வெளியானது. பத்தினி அல்லது கண்ணகியின் பாத்திரத்தில் பூஜா உமாசங்கர் நடித்தார்.[8]
1990 களின் முற்பகுதியில் தூர்தர்சனில் உபாசனா என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பப்பட்டது. அது சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டது.
Remove ads
இதையும் பார்க்க
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads