சேரர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேரர் (Chera dynasty) எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூறம். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.[1]

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
Remove ads
எல்லைகள்
சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.[1]
கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கருநாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.[2]
Remove ads
இருப்பிடம்
இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.[3]
மன்னர்கள்
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
சங்ககாலச் சேரர்கள்
சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
பிற்காலச் சேரர்கள்
- சேரமான் மாக்கோதையார் (பொ.ஊ. 598-629)
- சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756)
- சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800)
- குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820)
- இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844)
- சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885)
- இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917)
- கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944)
- இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962)
- பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019)
- பாசுகரா ரவி வர்மன் II (பொ.ஊ. 1019-1021)
- வீர கேரளா (பொ.ஊ. 1021-1028)
- இராசசிம்மா (பொ.ஊ. 1028-1043)
- பாசுகரா ரவி வர்மன் III (பொ.ஊ. 1043-1082)
- ரவி ராம வர்மா (பொ.ஊ. 1082-1090)
- ராம வர்மா குலசேகர (பொ.ஊ. 1090-1102)

Remove ads
படைபலம்
“ | முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம். | ” |
நகரங்கள்
கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை நகர்களாக விளங்கியன. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புகள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்[1]. தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
Remove ads
8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்
சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:[2]
Remove ads
12 (சுதந்திர நாடு) பிரிவுகள்
சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:[2]
Remove ads
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.[3]
நதிகள்
இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.[17]
வேளாண்மை
இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads