கண்ணா லட்டு தின்ன ஆசையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணா லட்டு தின்ன ஆசையா (Kanna Laddu Thinna Aasaiya) மணிகண்டன் தயாரித்து 2013 ல் வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படம். இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், சேது, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். [1]. இதை சந்தானம், ராம நாராயணனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.[2]
Remove ads
கதை
மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். சிவாவின் (சேது) வீட்டிற்கு எதிரே புதிதாக வரும் வீட்டில் சௌமியா (விசாகா சிங்) உள்ளார். அவரை யார் காதலிப்பது என்பதில் இவர்களுக்குள் போட்டி வருகிறது. யாரை சௌமியா காதலித்தாலும் மற்றவர்கள் அக்காதலை ஏற்றுக்கொள்வது என்று ஒப்புக்கொள்கிறார்கள். சிவா சௌமியாவின் சித்தி கோவை சரளாவிற்கு உதவி சௌமியா மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். கலியபெருமாள் (சந்தானம்) சௌமியாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். பவர் குமார் (பவர் ஸ்டார் சீனிவாசன்) சௌமியாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். மூவரும் தங்கள் காதலை சௌமியாவிடம் தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பமடையும் சௌமியா தன் பக்கத்து வீட்டுக்கார மாமியின் (தேவதர்சினி) ஆலோசனைப்படி தான் நடிகர் சிம்புவை காதலிப்பதாக பொய் சொல்கிறார். சௌமியாவின் பிறந்தநாளுக்கு சிம்புவை கொண்டுவர முயல்கிறார்கள். முடிவில் சௌமியா சிவாவை காதலிக்கிறார்.
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார்.[3]. இப்படம் ஆசையே அலை போலே, லவ் லெட்டர், ஹேய் உன்னைத்தான், பர்த்டே, டூயட் சாங், போட்டி என ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது.
கதை பற்றி சர்ச்சை
இந்தப்படத்தின் கதை தன்னுடைய இன்று போய் நாளை வா திரைப்படத்தின் கதையை கொண்டது எனக்கூறி இயக்குநர் பாக்யராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் கதையை பயன்படுத்த தன்னிடம் அனுமதி வாங்காமலயே தன்னிடம் அனுமதி வாங்கிவிட்டதாக பொய் கூறியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார் ,[4] . நீதிமன்ற உத்தரவுப்படி இப்படத்தின் தொடக்கத்தில் இப்படம் இன்று போய் நாளை வா படத்தின் தழுவல் என்றும் பாக்கியராஜுக்கு நன்றியும் கூறி படத்தை வெளியிட்டனர் [5].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads