ராம நாராயணன்
திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராம நாராயணன், (Rama Narayanan, ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.[2] 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும்.[3][4] தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.[4] சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
Remove ads
திரைப்படங்கள்
- குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.
தயாரித்தவை
அரசியல்
இராம நாராயணன் 1989 முதல் 1991 வரை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.[5]
இறப்பு
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2014 சூன் 22 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads