கத்தரி

ஒரு வகைத் தாவரம் From Wikipedia, the free encyclopedia

கத்தரி
Remove ads

கத்தரி (ஒலிப்பு, eggplant, aubergine, அல்லது brinjal) சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள்[1]. கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

விரைவான உண்மைகள் கத்தரி, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
பச்சைக் கத்தரிக்காய்

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் அருகே சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன. [2] [3]

Remove ads

கத்தரி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads