கனிட்ட தீசன்

கனிட்ட தீசன் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். From Wikipedia, the free encyclopedia

Remove ads

கனிட்ட தீசன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் 18 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஆனால், இது உண்மையில் 28 ஆண்டுகள் என்பது சில ஆய்வாளர்களது கருத்து.[1] இவனது ஆட்சிக்காலம் கிபி 161-179 என்றும்,[2] கிபி 165 - 193 என்றும்,[3] கிபி 155-183 என்றும்,[4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தமையனான பத்திக தீசன் என்பவனைத் தொடர்ந்து இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.

விரைவான உண்மைகள் கனிட்ட தீசன், ஆட்சி ...

பூதாராமவைச் சேர்ந்த மகாநாக தேரர் என்னும் பௌத்த துறவிக்காக கனிட்ட தீசன், அபயகிரி விகாரையில் ஒரு சிறந்த கட்டிடம் ஒன்றை அமைத்தான். அத்துடன், அபகிரியில் ஒரு சுற்றுச் சுவர் ஒன்றையும், ஒரு பிரிவேனாவையும் இவ்வரசன் அமைத்துக் கொடுத்தான். இது தவிர, மணிசோம விகாரையில் ஒரு பிரிவேனாவையும் அதே இடத்தில் புத்தரின் நினைவுப் பொருட்கள் மீது ஒரு கட்டிடத்தையும் இவன் அமைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது போலவே அம்பத்தலை, என்னும் இடத்திலும் நாகதீபத்திலும் இது போன்ற பௌத்த கட்டிடங்களை இவன் அமைத்ததாகத் தெரிகிறது. அநுராதபுரத்தில் உள்ள மகாவிகாரைப் பகுதியிலும் குக்குடகிரி எனப்பட்ட பிரிவேனா ஒன்றை இவன் கட்டியதுடன், மகாவிகாரையின் நான்கு பக்கங்களிலும் அழகிய தோற்றம் கொண்ட 12 பெரிய கட்டிடங்களை இவன் அமைத்தான்.

இவனது ஆட்சிக்காலத்தின் பின் சூளநாகன் அல்லது குச்சநாகன் என அறியப்பட்ட இவனது மகன் அரசனானான்.[5]

Remove ads

குறிப்புகள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads