கபிலவஸ்து மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கபிலவஸ்து மாவட்டம்map
Remove ads

கபிலவஸ்து மாவட்டம் (நேபாளி: कपिलवस्तु जिल्लाகேட்க), நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் உள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கபிலவஸ்து ஆகும். கபிலவஸ்து நகரத்தின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்தார்.

Thumb
நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் கபில வஸ்து மாவட்டத்தின் அமைவிடம்

1,738 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கபிலவஸ்து மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5,71,936 ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 2,85,599 ஆகவும், பெண்கள் 286,337 ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் 91,321 வீடுகள் உள்ளது.

Remove ads

வரலாறு

கபிலவஸ்து கௌதம புத்தர் பிறந்த சாக்கியர் குலத்தவர்களின் நாடாகும்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

புவியியல் படி, இம்மாவட்டம் தராய் சமவெளி மற்றும் சுயுரி மலைப் பகுதிகளைக் கொண்டது.

கபிலவஸ்து மாவட்டத்தின் கிழக்கில் ரூபன்தேகி மாவட்டம், வடமேற்கில் துயுக்குரி மாவட்டம், வடக்கில் டாங் மாவட்டம் மற்றும் அர்காகாஞ்சி மாவட்டம், தெற்கில் இந்தியாவின் அவத் பகுதியின் பலராம்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மேலதிகத் தகவல்கள் புவியியல் மற்றும் தட்ப வெப்பம், உயரம் ...

கபிலவஸ்து மாவட்டத்தின் கோடைக் கால வெப்ப நிலை 27° செல்சியஸ் வரையிலும், குளிர் கால வெப்பம் 15° செல்சியசிக்கும் குறைவாக உள்ளது.

Remove ads

மக்கள் தொகையியல்

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கபிலவஸ்து மாவட்டத்தின் மக்களில் 90% நேபாளியர்களும், 10% இந்தியக் குடியுரிமையுள்ள மக்கள் ஆவர்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்களில் அவதி பேசுபவர்கள் 80 விழுக்காடும், தாரு மொழி பேசுவோர் 5 விழுக்காடும், நேபாள மொழி பேசுவோர் 15 விழுக்காட்டினராகவும் உள்ளனர்.

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

Thumb
கபிலவஸ்து மாவட்ட நகராட்சிகளையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

நகராட்சிகள்

இம்மாவட்டம் கபிலவஸ்து, பான்கங்கா, பிரிக்குடி, சிவராஜ், கிருஷ்ணா நகர், புத்த பதிகா என ஆறு நகராட்சிகளைக் கொண்டுள்ளது.

கிராம வளர்ச்சி மன்றங்கள்

இம்மாவட்டம் எழுபத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]

பொருளாதாரம்

இம்மாவட்ட மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து வாழ்கின்றனர். நெல் மற்றும் கோதுமை பயிரிடுதல் முக்கிய சாகுபடியாகும். கரும்பு பணப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் பயிர், உற்பத்தி (மெட்ரிக் டன்கள்) ...
Remove ads

உலகப் பாரம்பரியக் களங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் யுனேஸ்கோ நிறுவனம் அங்கீகாரம் செய்த உலகப்பாரம்பரியக் களங்களில் பல இம்மாவட்டத்தில் உள்ளது.

புத்தர் தொடர்பான 138 தொன்மையான இடங்கள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads