லும்பினி

நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள புத்த மதப் புனித யாத்திரைத் தலம் From Wikipedia, the free encyclopedia

லும்பினி
Remove ads

லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी ஒலிப்பு,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் லும்பினி, புத்தரின் பிறப்பிடம், வகை ...
விரைவான உண்மைகள் லும்பினி लुम्बिनी, நாடு ...
Thumb
மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்
Thumb
லும்பினி, கௌதம புத்தர் பிறந்த இடம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட, உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று

புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.

லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]

Remove ads

பார்க்க வேண்டிய பிற இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads