கம்போடியாவின் மக்கள் தொகையியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கம்போடியா மக்கள் தொகையியல் (Demographics of Cambodia) என்ற இக்கட்டுரையில் கம்போடியா நாட்டின் மக்கள் தொகையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்து அலசப்படுகிறது.

விரைவான உண்மைகள் {{{place}}}-இன் மக்கள் தொகையியல், மக்கள் தொகை ...
Remove ads

மக்கள் தொகை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

1874 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கம்போடியா நாட்டின் மக்கள் தொகை 946,000 இல் இருந்து 2.4 மில்லியன் மக்கள் தொகையாக உயர்ந்தது.1950 ஆம் ஆண்டில் இத்தொகை 3,710,107 மற்றும் 4,073,967 என்பதாக உயர்ந்தது. 1962 இல் இத்தொகையின் அளவு 5.7 மில்லியனாக உயர்ந்தது. 1962 களில் 1975 ஆம் ஆண்டு வரையிலும் கம்போடியாவின் மக்கள் தொகை ஆண்டு 2.2 சதவீதம் என்ற வீதத்தில் உயர்ந்தது. இந்த உயர்வு சதவீதம் தென்கிழக்கு ஆசியாவில் மிகக்குறைவான உயர்வு வீதம் என்பது கவனிக்கத் தக்கதாகும். 1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் ஆட்சிக்கு வந்தபொழுது இந்த உயர்வு 7.3 சதவீதமாக இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்ட மக்கள் தொகையில் 1975 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 1 முதல் 2 மில்லியன் கணக்களவில் மக்கள் இறந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 1981 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மக்கள் தொகை சுமார் 6.7 மில்லியன் இருந்ததாக கம்பூச்சியசு மக்கள் குடியரசு கட்சி தெரிவித்தது. இருந்தாலும் இத்தொகை அநேகமாக மிகச்சரியாக 6.3 மில்லியன் முதல் 6.4 மில்லியனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1978 முதல் 1985 வரையிலான காலத்தில் சராசரி மக்கள் தொகைப்பெருக்கம் 2.3 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டது. (பார்க்க: அட்டவணை 2 பின்னிணைப்பு அ) கெமர் ரூச் ஆட்சிக்குப் பிறகு குழந்தைப் பெருக்கம் உயர்ந்ததைத் தொடர்ந்து மக்கள் தொகை 10 மில்லியனுக்கு அதிகமாகப் பெருகியது. பின்னர் சமீப காலங்களில் இப்பெருக்க வீதம் மெதுவாகக் குறையத் தொடங்கியது.

1959 இல் மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் 15 வயதிற்கு குறைவானவர்களாகக் காணப்பட்டனர். 1962 இல் இச்சதவீதம் சற்று அதிகாமாகி 46 சதவீதமாக உயர்ந்தது. 1962 இல் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் 15 மற்றும் 64 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 2 சதவீதத்தினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இம்மூன்று குழுக்களிலும் ஆண்கள், பெண்கள் சதவீதம் கிட்டத்தட்ட சமமாகவே காணப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வயதுப் பங்கீடு [2]

Thumb
கம்போடிய மக்கள் தொகை பட்டைக்கூம்பு-2005
மேலதிகத் தகவல்கள் மொத்த மக்கள் தொகை (ஆயிரங்கள்), 0–14 வயதினரின் மக்கள் தொகை (%) ...

மக்கள் தொகை அமைப்பு [3]

மக்கள் தொகை அமைப்பு (01.07.2013) (மதிப்பீடுகள்) (2008 -மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தவிர்த்த. தரவுகள்):

மேலதிகத் தகவல்கள் வயதுக் குழு, ஆண்கள் ...
மேலதிகத் தகவல்கள் வயதுக் குழு, ஆண் ...
Remove ads

முக்கியப் புள்ளிவிவரங்கள்

ஐ.நா. மதிப்பீடுகள் [2]

மேலதிகத் தகவல்கள் காலம், ஓராண்டுக்கு பிறப்புகள் ...

கருவுறுதல்

2010 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மொத்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளாக[4] இருந்தது.2000 ஆம் ஆண்டில் இந்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 4.0 குழந்தைகளாக[4] இருந்தது. நகர்புறத்தில் உள்ள பெண்களுக்கு சராசரியாக 2.2 குழந்தைகள் என்ற விகிதம், கிராமப்புறப் பெண்களுடன் ஒப்பிடுகையில் 3.3 குழந்தைகளாக[4] இருக்கிறது. மண்டோல் கிரி மற்றும் ரட்டனாக் கிரி மாகாணங்களில் உள்ள பெண்களின் இனப்பெருக்க விகிதம் அதிகபட்சமாக 4.5 குழந்தைகளாகவும், புனோம் பென்னில் குறைந்த பட்சமாக 2.0 குழந்தைகளாகவும் இருக்கிறது[4].

கருவுறுதல் மற்றும் பிறப்புகள்

மொத்த கருத்தரிப்பு விகிதம் (மொ.க.வி) மற்றும் தோராய பிறப்பு வீதம் (தோ.பி.வீ):[5] [6]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தோ.பி.வீ (மொத்தம்) ...

குழந்தை மற்றும் குழந்தைப்பருவ இறப்பு

கம்போடியாவில் குழந்தைப்பருவ இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது[4]. ஐந்தாண்டு காலத்திற்கான தற்போதைய குழந்தை இறப்பு விகிதம் 1000 பிரசவங்களுக்கு 45 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1000 பிரசவங்களுக்கு 66 குழந்தைகளாகவும் 2000 – இல் 95 குழந்தைகளாகவும் இருந்துள்ளது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் 2000 ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 124 குழந்தைகள் என்ற விகிதமும் 2005 இல் 83 இறப்புகள் 2010 இல் 54 இறப்புகள் எனப் படிப்படியாக குறைந்துள்ளது.

தாயின் கல்வி மற்றும் செல்வச்செழிப்பு காரணத்தால் குழந்தைப்பருவ இறப்பு குறிப்பிடும்படியாக குறைகிறது. உதாரணமாக, படித்த பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் படிக்காத பெண்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் இரண்டு மடங்காக இருக்கிறது. (72 க்கு 31) . இவ்வாறே செல்வச் செழிப்பில் உள்ள பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஏழைப் பெண்களின் குழந்தை இறப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. (77 க்கு 23).

நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது., எடுத்துக்காட்டாக, குழந்தை இறப்பு நகர்ப்புறங்களில் 1000 க்கு 22 என்பதை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1000 க்கு 64 மரணங்களாக உள்ளது. இவ்விறப்பு விகிதம் மாகாணத்திற்கு மாகாணம் கூட வேறுபடுகிறது. புனோம் பென்னில் 1000 க்கு 13 மரணங்கள் என்ற அளவு கம்பூங் சினாங் மற்றும் சிவேய் ரியிங் பகுதிகளில் 1000 க்கு 78 மரணங்களாக வேறுபடுகிறது.

ஆயுட்காலம்

1959 இல், கம்போடியா மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 44.2 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 43.3 ஆண்டுகளாகவும் இருந்தது. 1970 ஆம் ஆண்டு இந்த சராசரி 2.5 ஆண்டுகள் மேலும் அதிகரித்தது. பெண்களின் நீண்ட ஆயுட்காலம் அவர்களின் பேறுகாலம் மற்றும் பிரசவம் முதலியவற்றில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது.

Remove ads

இனக் குழுக்கள்

Thumb
கம்போடியாவின் ஓர் இனக்குழு வரைபடம்

கம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன.

மீகாங் நதிக்கு அருகில் தெற்கு கோராட் பீடபூமியில் இருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான வில் போன்ற நிலப்பகுதியில் கெமர் இன மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியில் நவீன கால தாய்லாந்து லாவோசு மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் வடகிழக்கில் சந்திக்கின்றன. தொன்லே சாப் ஏரியில் இருந்து ஏலக்காய் மலைகள் வரையிலும் உள்ள நிலப்பகுதி தென்மேற்கில் நீண்டு பின்னர் தென்கிழக்காக மீண்டும் தொடர்ந்து தென்கிழக்கு வியட்நாமில் உள்ள மீகாங் ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் காணப்படுகிறது.

அரசியல் மற்றும் சமூக ஆதிக்கம் மிகுந்த கெமெர் இனக்குழுவைத் தவிர மற்ற கம்போடியா இன மக்களை, " பழங்குடியின சிறுபான்மையினர்" அல்லது " பழங்குடியினர் அல்லாத சிறுபான்மையினர்" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர் மேலும் உள்நாட்டு பழங்குடியின சிறுபான்மையினரை பொதுவாக கெமர் லோயு (மேட்டுநிலக் கெமர்) என்று அழைத்தனர். இவர்கள் பெரும்பாலும் ரத்தாநாக்கிரி, மாண்டுல்கிரி மற்றும் சிடங் திரங் போன்ற மிகச்சிறிய மலைப்பிரதேச மாகாணங்களில் கணிசமாக வாழ்ந்தனர்.

தோராயமாக கம்போடியாவில் 17 முதல் 21 வரையிலான தனி இனக்குழுக்கள் காணப்பட்டன, அக்குழுக்கள் பெரும்பாலும் கெமர் மொழியுடன் தொடர்புடைய தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் குயி மற்றும் தம்புவன் மொழிகள் உள்ளிட்ட கெமர் லோயு குழுவினர் எனப்பட்டனர். இத்தகைய மக்களை அந்நிலப்பகுதியில் வாழ்வதற்குரிய தொன்மையான பழங்குடியினராக கெமர் இனத்தவர் கருதினர். ரேடு மற்றும் யாராய் என்ற இரு மேட்டு நிலக்குழுவினரும் சாம் மக்கள் எனப்பட்டனர். பண்டைய சாம் பகுதியில் இருந்து வந்த இவர்கள் தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் கெமர் இனத்தவர் கலாச்சாரத்துடன் ஒன்றுபடாமல் அவர்களுடைய பாரம்பரிய ஆவியுலக நம்பிக்கைகளைப் பின்பற்றினர்.

மொழிகள்

அலுவலக மொழி
கெமர்
கல்வி பயிற்றுமொழி
ஆங்கிலம், பிரெஞ்சு[7] (3%, 423,000 பிரெஞ்சு பேசுபவர்கள் [8]).
சிறுபான்மை மொழிகள்
சாம் (2.2%), வியட்நாமீசு (0.8%), தும்பூன் (0.4%);[9]
லாவோ, யாராய், யூயி சீனம், மற்றும் பல சிறு மொழிகள் மோன்–கெமர் மொழி < 0.25%
சைகை மொழிகள்
கம்போடியன் சைகை மொழி, அமெரிக்கன் சைகை மொழி

படிப்பறிவு

வரையரை: 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்
மொத்த மக்கள்தொகை: 73.6%
ஆண்கள்: 84.7%
பெண்கள்: 64.1% (2004 திட்டம்.)

கல்வித்துறை செலவு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் - 1.7% (2004)
Remove ads

அயல்நாடுகளில் கம்போடியர்கள் மக்கள் தொகை

கம்போடியர்கள் வழும் அயல்நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads