கம்மெலினேசியே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்மெலினேசியே (தாவரவியல் பெயர்:Commelinaceae[2], dayflower family அல்லது spiderwort family) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Mirb. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: Hist. Nat. Pl. 8: 177. 1804 (as "Commelinae"). இக்குடும்பத்தின், வரிசை கம்மெலினேல்சு (Commelinales) ஆகும். இக்குடும்பத்தில், 41 பேரினங்களும், 731 இனங்களும் உள்ளன.[3] இவற்றில் கம்மெலினா (Commelina = dayflowers = 'பகல் பொழுது பூக்கள்'), திராடெசுகன்டியா (Tradescantia = spiderworts) என்ற இரண்டு பேரினங்கள் முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.
Remove ads
வளர் இயல்புகள்
இவை நிலத்தில் வாழும் இயல்புடையன. இக்குடும்பத்தின் பல இனங்கள், அலங்காரப் பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. இந்தத் தாவரங்களின், தண்டுகள், பொதுவாக நன்கு வளர்ச்சியடைந்து, முனைகளில் பல நேரங்களில் பருத்துக் காணப்படுகின்றன. இலைகள் தண்டினைச்சுற்றி மாறி மாறி, எதிர்புறமாக அமைந்துள்ளன. மலர்கள் பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் அல்லது அதற்கும் குறைவான நேரமே, உதிராமல் இருக்கின்றன. மலர்களில் தேன் இல்லாமலும், மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளுக்கு, மகரந்தத் தூள்களை மட்டுமே வழங்குகின்றன. ஒவ்வொரு பூவிலும் ஆண், பெண் இன உறுப்புகள் (hermaphroditic) இருக்கின்றன.
Remove ads
இதன் பேரினங்கள்
- இத்தாவரக்குடும்பத்தில், 36 பேரினங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads