பேரினம் (உயிரியல்)
உயிரலகு தரநிலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரினம் (Genus)[1] (இலங்கை வழக்கு-சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும்.[2] இது சிற்றினத்திற்கு மேல் நிலையிலும், குடும்பத்திற்கு கீழ் நிலையிலும் உள்ள ஒரு வகைப்பாட்டு தரநிலை ஆகும். பல சிற்றினங்கள் அடங்கியது ஒரு பேரினம். ஒரு உயிரியின் விலங்கியல் பெயரில் முதலில் வருவது பேரினப் பெயராகும். ஒரு பேரினத்தின் கீழ் பல சிற்றினங்கள் உள்ளன. உதாரணமாக, பாந்தெரா லியோ (சிங்கம்) மற்றும் பாந்தெரா ஓன்கா (ஜாகுவார்) ஆகியவை பாந்தெரா பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்கள் ஆகும். பாந்தெரா என்பது பெலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப்பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள பொதுவான அடுத்த பெயரீட்டுத் தரநிலை சிற்றினம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் (டி. என். ஏ புணர்வுகள்) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனமும் குறிப்பிடப்படுகின்றது.

பேரினம் என்பது இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads