கயர்பூர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கயர் இராச்சியம் (State of Khairpur (Sindhi: خيرپور رياست، Urdu: ریاست خیرپور)[1] இந்த இராச்சியம் 15,730 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டிருந்தது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால பாகித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பகுதியாக உள்ளது.
Remove ads
வரலாறு
தல்பூர் வம்சத்தின் சோரப் கான் தல்பூர் 1783-ஆம் ஆண்டில் கயர்பூர் இராச்சியத்தை நிறுவி தன்னாட்சி கொண்ட முடியாட்சியுடன் ஆண்டார்.[2]பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கயர்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கயிர்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் கயர்பூர் இராச்சியம் 14 அக்டோபர் 1955-ஆம் ஆண்டில் பாக்கித்தான் நாட்டுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை
1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கயர்பூர் இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகை 2,27,183 ஆகும். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 83%, இந்துக்கள் 17%, பிறர் 712 ஆக இருந்தனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads