சருகுநாய்
அமெரிக்கா கனடாவில் வாழும் குள்ளநரி சிற்றினம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சருகுநாய் (Coyote) என்பது "கேனிசு" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[3]

பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு சருகுநாய்கள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். சருகுநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இந்த சருகுநாய்களை பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இவை தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. சருகுநாயின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். சருகுநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.

Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads