கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
Remove ads

கரக்பூர் சந்திப்பு இரயில் நிலையம் (Kharagpur Junction railway station) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டம் காரக்பூரில் அமைந்துள்ளது. ஊப்ளி சந்திப்பு தொடருந்து நிலையம், கோரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய தொடருந்து நிலையங்களை அடுத்து நடைமேடை நீளத்தின் அடிப்படையில் இது நான்காவது நீளமான தொடருந்து நிலையமாகும். ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஏ1 நிலை தொடருந்து நிலையமாக காரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் வகைப்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்Kharagpur Junction, பொது தகவல்கள் ...
Thumb
கரக்பூர் சந்திப்பு இரயில் நிலையம்
Remove ads

வரலாறு

காரக்பூர் சந்திப்பு 1898-99 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. வங்காளம் நாக்பூர் இரயில்வேயின் காரக்பூர்-கட்டாக் இரயில் பாதை 1899 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் திறக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் அன்று கோலாகாட்டில் உரூப்நாராயண் ஆற்றின் மீது பாலம் திறக்கப்பட்டு அவுராவை காரக்பூருடன் இணைத்தது. இதே ஆண்டு காரக்பூர் சார்க்கண்ட் மாநிலத்தின் சினி நகருடன் இணைக்கப்பட்டது. 1898-99 ஆம் ஆண்டில் பாதை தயாராக்கப்பட்டு காரக்பூர்-மிட்னாபூர் கிளை பாதை 1901 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[1]

Remove ads

உள்கட்டமைப்பு

ஊப்ளி சந்திப்பு, கோரக்பூர் மற்றும் கேரளாவின் கொல்லம் சந்திப்பு ஆகிய தொடருந்து நிலையங்களுக்குப் பிறகு காரக்பூர் தொடருந்து நிலையம் 1,072.5 மீட்டர்கள் (3,519 அடி) நீளம் நடைமேடையைக் கொண்டு உலகின் நான்காவது நீளமான இரயில் நடைமேடையைக் கொண்டுள்ள தொடருந்து நிலையமாக சிறப்பு பெற்றது.[2][3][4] கோரக்பூர் இரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு நிறைவடைந்து 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று புதிய நடைமேடை திறக்கப்பட்டது. அதுவரை உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பெருமையை காரக்பூர் தொடருந்து நிலையம் பல ஆண்டுகளாக வைத்திருந்தது.[5] காரக்பூர் ஆசியாவின் மிகப்பெரிய கணினி சார்ந்த ஒன்றொடு ஒன்று இணைப்பு அமைப்பையும் கொண்டுள்ளது.[6]

காரக்பூர் சந்திப்பின் நடைமேடை எண்கள் 1, 3, மற்றும் 2, 4 ஆகியவை தொடர்ச்சியாக உள்ளன. 24 பெட்டிகள் கொண்ட கோரமண்டல் விரைவு வண்டி நடைபாதை 3 எண்ணில் நின்றால் அதன் வால் நடைபாதை எண் 1 வரை நீண்டிருக்கும். ஆலு காசா என்ற உணவு காரக்பூர் இரயில் நடைமேடையில் விற்கப்படும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads