தமிழ்ச் சங்கம்

தமிழறிஞர்களின் கூடுகை From Wikipedia, the free encyclopedia

தமிழ்ச் சங்கம்
Remove ads

தமிழ்ச்சங்கம் (Tamil Sangams) என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...

சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.[1][2][3] பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியபுராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன.[4] இவை அனைத்தும் சங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 400 முதல் பொ.ஊ. 200 வரை இருந்துள்ளது.[5] இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது.[6] தென்னிந்திய வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி, மதுரையில் ஒரு காலத்தில் தமிழ் புலவர்கள் சங்கம் வளர்த்தது உண்மையாக இருக்கக் கூடும் என்று கூறுகிறார். ஆனால், சங்கத்தைப் பற்றிய உண்மைகள் பல கற்பனைகளுடன் கலந்து போனதால், அவற்றிலிருந்து நம்பகமான முடிவுகளை பெறுவது கடினமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.[7]

Remove ads

பல்வேறு கால-கட்டங்களில் தமிழ்ச்சங்கம்

  • சங்கம் (முச்சங்கம்)
  • நான்காம் தமிழ்ச்சங்கம் - பாண்டித்துரைத் தேவர் தலைமையில் 1901-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது. நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத் தேவர், தலைவராக வீற்றிருக்க 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்தது.[8][9]
  • ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் இணைய இதழ் ஒன்று இயங்கி வருகிறது. அது பண்டைய தமிழர்களைப் பற்றியும் மலர்களைப் பற்றியும் பதிவேற்றி வருகிறது.[10]
Remove ads

அடிக்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads