கரந்தை, திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள இரட்டை கிராமம் From Wikipedia, the free encyclopedia

கரந்தை, திருவண்ணாமலை மாவட்டம்
Remove ads

கரந்தை, தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரந்தை ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். கரந்தை மற்றும் திருப்பனமூர் இரட்டை கிராமங்கள் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த சமண கோவில்கள் உள்ளன.[1] இந்த ஊரிலும், அருகிலுள்ள சிற்றூர்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சமண சமயத்தவர் வாழ்கின்றனர்.[2]

விரைவான உண்மைகள் கரந்தை, நாடு ...

திருப்பணமூர் கிராமத்தில் ஒரு சைனக் கோயில் உள்ளது. இது புஷ்பதந்தருக்காக அமைக்கபட்ட கோயிலாகும். இங்கு இவரின் அரிய பல சுதைச் சிற்பங்களும், பித்தளை உருவங்களும், ஒரு நூலகமும் உள்ளன. இது ஆச்சார்யா அகலங்கா தேவாவின் வீடு என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் சைன முனிவர்களான தர்மசாகர், சுதர்மசாகர், கஜபதி சாகர் ஆகியோரின் காலடித் தடங்கள் உள்ளன. இவர்கள் சல்லேகனையில் ஈடுபட்டவர்களாவர். இந்த கிராமம் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் மற்றும் அவரது தந்தை, ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சிம்மகுட்டி வர்த்தமானனின் மூதாதையர் கிராமமாகும்.

Thumb
திருப்பணமூர் திகம்பர சமண கோயில்
Thumb
கரந்தை திகம்பர சமண கோயில் வளாகம்

ஆச்சார்யர் அகலங்கா தேவாவின் சமாதி: திருப்பணமூருக்கும் கரந்தைக்கும் இடையில் பண்டைய சமண முனிவர்களின் கால்தடங்களுடன் சத்திரிகளுடன் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. இதில் தர்க்கவியலாரும், சமசுகிருதவாதியுமான ஆச்சார்யா அகலங்கா தேவா ஆகியோரின் சமாதி உள்ளது. இவர் திகம்பர துறவிகளின் தேவ சங்க ஒழுங்கை நிறுவியவர்.

கரந்தையில் பகழ்பெற்ற சமண கோவில்கள் வளாகம் உள்ளது.[3] இது ஒரு காலத்தில் சமண முனிவர்கள் வசித்த இடமாக இருந்தது. எனவே இது முனிகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இது புகழ்பெற்ற சமண தர்க்கவியலாளர் ஆச்சார்யா அகலங்கர் (720-780) உடன் தொடர்புடைய தளமாகும், எனவே இது அகலங்கபஸ்தி என்றும் அழைக்கப்படுகிறது.[4] சமண கோயில் வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. இதில் குந்துநாதருக்காக அமைக்கபட்டதே பிரதான கோயில் ஆகும். இது கி.பி 806-896 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் நந்திவர்மா சிர்கனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. தெற்கே உள்ள மகாவீரர் கோயில் 12 ஆம் நூற்றாண்டய கோயிலாகும். ஆதிநாதர் கோயிலும், குஷ்மந்தினி (அம்பிகை) தேவியின் அருகிலுள்ள சன்னதியும் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தென்மேற்கில் ஒரு பிரம்மதேவா சன்னதி அமைந்துள்ளது.

புதிய சமணச் சிலைகளை நிறுவ 1991 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும் இங்கு ஒரு பஞ்சகல்யனகா சடங்கு நிகழ்த்தபட்டது.[5] ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், இங்கு பிரம்மோஸ்தம் கொண்டாடப்படுகிறது. அட்சய திருத்தி, மகாவீர் ஜெயந்தி, தீபாவளி, ஜினராத்திரி, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

கரந்தை வளாகத்தில் உள்ள விஜயநகர கால சுவரோவியங்கள் பிரபலமானவை.[6][7]

கரந்தை ஊரானது தமிழ் இலக்கண நூலான நன்னூல் ஆசிரியரான பவனந்தி முனிவரின் ஊராகும். தரமசாகர நூலகத்தில் வரலாற்று கால கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. இது 1930 களில் திருபணமூரைச் சேர்ந்த ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால் அவர்களால் அமைக்கப்பட்டது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads