அம்பிகை, சமணம்

From Wikipedia, the free encyclopedia

அம்பிகை, சமணம்
Remove ads

அம்பிகை (Ambika), (अम्बिका देवी சமண சமயத்தில் இயக்கி எனும் பெண் பரிவார தேவதையாவார். [1] [2]அம்பிகை, 22வது தீர்த்தங்கரரான நேமிநாதரின் காவல் தேவதை ஆவார். சமண சமயத்தில் அம்பிகையை அம்பை , அம்பா , குஷ்மாந்தினி, பத்மாவதி மற்றும் அம்ர குஷ்மாந்தினி என்றும் அழைப்பர்.[3]

விரைவான உண்மைகள் அம்பிகை, சமணம் ...

சிற்பங்கள்

கர்நாடகா மாநிலத்தின் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கரஜாகி கிராமத்தில், அம்பிகையின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சக ஆண்டு, கிபி 1251ல் நிறுவப்பட்டதாக, தேவநாகரி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.[4]

படிமவியல்

Thumb
மத்திய கால அம்பிகையின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

சமண சமய மரபின் படி, தங்க நிற அம்பிகையின் வாகனம் சிங்கம் ஆகும். நான்கு கைகளைக் கொண்ட அம்பிகை, தனது இரண்டு வலது கைகளில் ஒன்றில் மாம்பழத்தையும், மற்றொன்றில் மாமரத்தையும் தாங்கியுள்ளார். மேலும் தனது இரண்டு இடக்கைகளின் ஒன்றில் லகானையும், மற்றொன்றில் தனது இரண்டு மகன்களையும் தாங்கியுள்ளார்.

Remove ads

அம்பிகையின் சிற்பங்கள் கொண்ட கோயில்கள்

படக்காட்சிகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads