கராத்தே தியாகராஜன்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராத்தே தியாகராஜன் (ஆங்கிலம்: Karate R. Thiagarajan) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார்.
கராத்தே பயிற்றுநராக இருந்து, பல லட்சம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இவர் கராத்தே போட்டிகளில் இந்தியாவின் முன்னாள் வாகையராவார்.[1] இவர் அகில இந்திய கராத்தே கூட்டமைப்பின் தலைவராக இருந்து பின்னர் நிதி கையாடல் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பதவி விலகினார்.[2] அதன்பிறகு இந்திய கராத்தே சங்கம் (கே.ஏ.ஐ) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.[3]
Remove ads
அரசியல் வாழ்க்கை
பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து மு. க. ஸ்டாலின் விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை பொறுப்பு நகரத்தந்தையாகப் பதவி வகித்தார்.[4][5] 2001 இல் கருணாநிதி கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர்.[6] 2005 இல் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.[7][8] தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.[9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads