கரிமமற்ற காடி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரிமமற்ற காடி (Mineral acid) என்பது கரிமமற்ற (inorganic) வேதியியல் சேர்மங்களால் ஆன காடியாகும். பெயருக்கு ஏற்றாற்போல இவ்வகைக் காடிகளில் கரிம அணுக்கள் இருக்காது. கனிம அமிலங்கள் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மற்ற காடிகளைப் போலவே கரிமமற்ற காடிகளும் நீரில் கரைந்து இருக்கும் பொழுது ஐதரச மின்மவணுக்களை (ion) விடுகின்றன.

பண்புகள்

பரவலாகவும் பொதுவாகவும் பயன்படுத்தப்படும் கரிமமற்ற காடிகள் கந்தகக் காடி, ஐதரோகுளோரிக் காடி, நைட்ரிக் காடி ஆகையவை ஆகும். கரிமமற்ற காடிகளில் மிகவும் வலிமை மிக்கக் காடிகள் (எ.கா. கந்தகக் காடி) முதல் மிக மென்மையான காடிகள் (எ.கா. போரிக் காடி) வரை உள்ளன. கரிமமற்ற காடிகள் நீரில் நன்றாகக் கரைவனவாகவும், கரிமக் கரைப்பான்களில் கரையாதனவாகவும் உள்ளன.

கரிமமற்ற காடிகள் பற்பல வேதியியல் தொழிலகங்களில் பல்வேறு வேதியியல் பொருட்களை உருவாக்கிப் படைக்க முதற்பொருளாகப் பயன்படுகின்றன. இக் காடிகள், குறிப்பாகக் கந்தகக் காடி, நைட்ரிக் காடி, ஐதரோகுளோரிக் காடி போன்றவை, பெரிய அளவிலே ஆக்கப்படுகின்றன.

கரிமமற்ற காடிகள், அவற்றின் அரிப்புத் தன்மைக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன. எடுத்துக் காட்டாக நீர்த்த ஐதரோகுளோரிக் காடி கொதிகலன்களின் உட்பகுதியில் படிந்திருக்கும் படிவுகளை அரித்தெடுக்கப் பயன்படுகின்றது. இதனை படிவு-நீக்கல் (de-scaling) என்பர்.

Remove ads

எடுத்துக்காட்டுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads