சின்னக் கீச்சான்
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பழுப்பு முதுகுக் கீச்சான் அல்லது சின்னக் கீச்சான் (Bay-backed shrike) என்பது தமிழ்நாட்டில் காணப்படும் கீச்சான் பறவைச் சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் லானியசு விட்டேட்டசு). இது தெற்காசியாவில் வசிக்கும் லேனிடே என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த குருவிச் சிற்றினமாகும்.
Remove ads
பெயர்கள்
தமிழில் :கருஞ்சிப்பு முதுகுக் கீச்சான்
ஆங்கிலத்தில் :Bay-backed shrike
அறிவியல் பெயர் :Lanius vittatus
உடலமைப்பு
இச் சிறிய கீச்சான் 17 செ.மீ. உடல் நீளமுடையது. உடலின் மேலே அரக்கு-பழுப்பு நிறத்தில் வெளிறிய தொடையினையும் வெள்ளை விளிம்புகளுடன் நீண்ட கருப்பு நிற வாலினையும் கொண்டது. அடிப்பகுதி வெண்மையானது.[2] கொண்டையும் கழுத்தும் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் நெற்றியும் கண்பட்டையும் கருப்பாக இருக்கும். ஒரு சிறிய வெள்ளை திட்டு இறக்கையில் காணப்படும். அலகு மற்றும் கால்கள் அடர் சாம்பல் நிறத்தில் உள்ளன.[3][2] பாலின வேறுபாடுகள் காணப்படுவதில்லை.[2]
Remove ads
காணப்படும் பகுதிகளும் உணவும்
சின்னக் கீச்சான், ஆப்கானித்தான், பாக்கித்தான், நேபாளம் மற்றும் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. சமீபத்தில் இலங்கையில் இதன் இருப்பு பதிவு செய்யப்பட்டது.[2] முள் மரங்களோடு கூடிய காடுகள் விளைநிலங்களைச் சார்ந்த வேலிகள் தந்திக் கம்பிகளிலும் தனித்து அமர்ந்து காணப்படும். தத்துக்கிளி, சில வண்டு, ஓணான் ஆகியவற்றை உணவாக உண்ணும். இரையை முள் போன்ற கூர்மையான அலகினால் கிழித்து உண்ணுகிறது. அலகு வலுவான கொக்கி போன்றது. ஆனால் இதன் பாதங்கள் கிழிக்க ஏற்றதாக இல்லை.[2]
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் கரவேல், இலந்தை, வேலிக் கருவை போன்ற மரங்களின் கவட்டியில் கூடமைத்து 3 முதல் 5 முட்டைகள் இடும்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads