கருநெஞ்சுக்காடை

பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

கருநெஞ்சுக்காடை
Remove ads

கருநெஞ்சுக்காடை (ஒலிப்பு) (rain quail or black-breasted quail (Coturnix coromandelica) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் காடை இனமாகும். இப்பறவை பாக்கித்தான், இந்தியா, நேபாளம், இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் கருநெஞ்சுக்காடை, காப்பு நிலை ...
Thumb
கருநெஞ்சுக்காடையின் தலை ஓவியமாக
Remove ads

விளக்கம்

கருநெஞ்சுக்காடைகளின் முகமும் தொண்டையும் கருத்து வெண்மையான மேவாயின் பின்னணியில் எடுப்பாக தெரியும். இதன் இறகுகள் தவிட்டு நிறத்திலும், மேற்பாகத்தில் வெளுத்த கோடுகளும், புள்ளிகளும் காணப்படும். மார்பு கருஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மையாகவும், வயிறும் வாலடியும் வெண்மையாகவும் காட்சி தரும். வயிற்றின் பக்கங்களில் வெதிவான கருங்கோடுகள் காணலாம். பெண் ஆணைவிட சற்று பெரியதாக நிறங் குன்றி காணப்படும். ஆண்காடைகளுக்கு நெஞ்சிலும், அடிவயிற்றிலும் கருநிற இறகுகள் இருக்கும். இப்பறவை 6–6.5 அங்குளம் (15–17 செ.மீ) நீளத்திலும், 64–71 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும்.[2]

காலை மாலை நேரங்களிலும் இனப்பெருக்க காலத்திலும் இரவிலும் ஆண் பறவை க்விட்-கிவிட் என தொடர்ந்து கத்தும். இது பொதுவாக நாட்டுக் காடையின் ஒலியில் இருந்து வேறுபட்டது.[3]

Remove ads

பரவல்

இவை நடு வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கிதானின் சிந்து சமவெளியில் புல்வெளிகள், பயிர் செய்யப்பட்ட வயல்வெளிகள், குறுங்காடுகளிலும்கவும், கங்கைச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப துணைக்கண்ட இந்தியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் குளிர்காலத்தில் தெற்கே காணப்படும்.

நடத்தை

கருநெஞ்சுக் காடைகள் புற்கள் மற்றும் பிற தாவரங்களின் விதைகள், பூச்சி குடம்பிகள் சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன. இனப்பெருக்கம் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என்றாலும் முக்கியமாக சூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு இனப்பெருக்கம் நடைபெறும். முட்டைகள் தரையில் சுரண்டி இடப்படுகின்றன. சில சமயங்களில் கள்ளி அல்லது அதை ஒத்த புதர்களின் கீழ் இடும். பொதுவாக ஆறு முதல் எட்டு முட்டைகள் இடும். அடைகாக்கும் காலம் பதினாறு முதல் பதினெட்டு நாட்கள் ஆகும். குஞ்சுகள் குஞ்சு பொரித்த உடனேயே கூட்டை விட்டு நடந்து வெளியேறி சுமார் எட்டு மாதங்கள் பெற்றோருடன் இருக்கும்.[4]

நிலை

கருநெஞ்சுக் காடைகள் மிகவும் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. இந்த இனம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்று மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads