கரும்பு இனப்பெருக்க நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரும்பு இனப்பெருக்க நிறுவனம் (Sugarcane Breeding Institute) என்பது தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும்.[1] இது 1912இல் நிறுவப்பட்டது மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. இது கரும்பு உற்பத்தியை பெருக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நிறுவப்பட்டது. மேலும் நாட்டின் ஒரே கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் இது ஆகும்.[2]

விரைவான உண்மைகள் Established, Owner ...
Remove ads

வரலாறு

கரும்பு இனப்பெருக்கம் ஆராய்ச்சி நிறுவனமானது 1912 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது.[3] இந்நிறுவனம் அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் வேளாண் துறையின் நிதியுதவியுடன், சென்னை மாகாணத்தின் கீழ் கரும்பு ஆராய்ச்சி மையமாக நிறுவப்பட்டது.[4] 1932 இல், ஒரு புதிய மையமானது கர்னலில் வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் துவக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு கண்ணூரில், கரும்புக்கான ஒரு புதிய ஆராய்ச்சி மையமானது உலகளாவிய கரும்பு வித்து சேகரிப்புக்காக நிறுவப்பட்டது இடம் பெற்றது.[4] 1969 இல் இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. 1999 இல், பாலக்காடு, அகாலியில் ஒரு புதிய ஆராய்ச்சி மையமாக செயல்படத் துவங்கியது.[4]

Remove ads

பணிகள்

இந்தியாவின் கரும்பு சாகுபடி பரப்பளவில் 90% அதிகமாக பயிரிடப்படும் கரும்புவகைகள் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும்.[5] இந்த நிறுவனம் கரும்புகளின் மிதவெப்ப வகையை மேம்படுத்த முதல் முயற்சியில் கலப்பின ஒட்டுரகக் கரும்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. 1918 இல் ஆற்றோரம் வளர்ந்து நிற்கும் நாணல்களையும், நாட்டுக் கரும்பையும் கலப்பினமாகக்கொண்டு கோ 205 என்ற பெயரில் ஓர் ஒட்டுரகக் கரும்பை உருவாக்கினார்கள் இது கரும்பு மகசூலில் 50 விழுக்காட்டை அதிகரித்தது.[6][7] இந்த புதிய கரும்பு வகைகள் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Remove ads

சர்ச்சைகள்

மத்திய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads