கருவேலம்பூக்கள் (திரைப்படம்)

பூமணி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கருவேலம்பூக்கள் (திரைப்படம்)
Remove ads

கருவேலம் பூக்கள் (ஆங்கிலம்: Karuvelam Pookkal) என்பது 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பூமணியின் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாகத் தயாரித்தன.[1]

விரைவான உண்மைகள் கருவேலம் பூக்கள்Karuvelam Pookkal, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

கருவேலம்பூக்கள் கரிசல்குளம் என்னும் ஊரில் குழந்தைகளை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலுக்கு அனுப்புவதும், சிற்றூரில் பருவ மழை தாமதமானால் விவசாயிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்லமுத்துவாக நாசர், அவரது மனைவி வடிவாக ராதிகா தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள். படிக்க வைப்பதில் உறுதியாகவுள்ளனர். மாரியப்பனாக சார்லி அதே ஊரைச் சேர்ந்த ஆண்களை மூளைச் சலவை செய்து வேளைக்கு ஆள் பிடிக்கும் தரகராக நடித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகாலை ஜந்து மணிக்கு தூக்கக் கலக்கத்தில் பேருந்தில் ஏறிச் செல்லும் காட்சியுடன் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் இலக்கிய எழுத்தாளரான பூ. மாணிக்கவாசகம் என்னும் இயற்பெயர் கொண்ட பூமணி இயக்கியுள்ளார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவில் இளையராஜா இசையமைத்து 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை இந்தியா தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், மற்றும் தூர்தர்ஷன் ஆகிய அரசு சார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

Remove ads

விருதுகள்

  • 1996 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு[2]

[3]

சர்வதேச திரைப்பட விழாக்கள்

இந்த திரைப்படம் பின்வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது:

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads