பி. லெனின்
இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளர், இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. லெனின் (B. Lenin, பிறப்பு: பீம்சிங் லெனின்) என்பவர் தமிழ், மலையாளம், இந்தி திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் ஆவார். தமிழ்த் திரைப்படப் படைப்பாளியான ஏ. பீம்சிங்கின் மகனான லெனின், உதவி படத் தொகுப்பாளராகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979) திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். 1980 களின் நடுப்பகுதியில், லெனின் தன் நீண்டகால உதவியாளர் வி. டி. விஜயனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இருவரும் எலி மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் படத் தொகுப்பு செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு வரை, லெனின் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். 2011ல் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராக இருந்தார்.

Remove ads
வாழ்க்கை
லெனின் எட்டு குழந்தைகளில் ஒருவராக பொண்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஏ. பீம்சிங் தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருந்தார்.[1] லெனின் தன் தந்தையின் இணை இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது பல படங்களுக்கு படத் தொகுப்பில் உதவினார்.[2] ஆய்வக நுட்பவியல் மற்றும் ஒலிப் பொறியியல் துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் ஆனார்.[2] உதவியாளராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியப் பிறகு, லெனின் 1979 இல் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சுயாதீன படத் தொகுப்பாளராக பணியைத் துவக்கினாலும், பின்னர் இவர் தன் உதவியாளர் வி. டி. விஜயனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் 80 மற்றும் 90 களில் நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி, காதலன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினர். சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றனர் .[3]
இவர் 1983 இல் எத்தனை கோணம் எத்தனை பார்வை (1983) மூலம் இயக்குநராக அறிமுகமானார், மேலும் நான்கு திரைப்படங்கள் மற்றும் நான்கு திரைப்படமற்ற படங்களை இயக்கினார். இவரது குறும்படமான நாக்-அவுட் (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதைப் பெற்றது.[4] லெனின் திரைப்படமல்லா படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.[5] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது குறும்படமான குற்றாவளியை இயக்கினார், இது 43 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.[4] 2002ல் லெனின் ஊருக்கு நூறு பேர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத் தவிர, சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.[2] மரணதண்டனை தொடர்பான இந்தப் படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றது.[2] சொல்லடி சிவசக்தி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.[5] லெனின் 57வது தேசிய திரைப்பட விருதுகளின் (2010) நடுவர் குழு உறுப்பினர் மற்றும் 2011 இல் ஆஸ்கார் தேர்வுக் குழுவின் (FFI) தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார் [4][6] இப்போது புனே திரைப்படக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் பங்களித்து வருகிறார், லெனின் இப்போது கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட கல்வி நிறுவனமான கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் அதன் துறைத் தலைவராக இணைந்து அதன் மாணவர்களுக்கு நிகழ்நேர தொழில்முறை திரைப்பட உருவாக்க அறிவைப் பெற தன் பரந்த அனுபவத்தின் மூலம் உதவிவருகிறார்.[7]
Remove ads
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
படத் தொகுப்பாளராக
இயக்குநராக
நடிகராக
உதவி படத் தொகுப்பாளராக
Remove ads
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள்
- 1992 – நாக்-அவுட் – திரைப்பட அல்லாத படத்திற்கான சிறந்த இயக்குநர் (தயாரிப்பாளரும் கூட)
- 1994 – காதலன் – சிறந்த படத் தொகுப்பு ( வி. டி. விஜயனுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது)
- 1995 – குற்றவாளி மற்றும் ஊடாக – திரைப்படம் அல்லாத படத்திற்கான படத் தொகுப்பு (வி. டி. விஜயனுடன் பகிரப்பட்டது)
- 2001 – ஊருக்கு நூறு பேர் – சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது
- 2001 – ஊருக்கு நூறு பேர் – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்
- 1988 – சிறந்த படத் தொகுப்பாளர்
- 1994 – சிறந்த படத் தொகுப்பாளர் – காதலன்
- 2010 – சிறந்த படத் தொகுப்பாளர் – நம்ம கிராமம்
கேரள அரசு திரைப்பட விருதுகள்
- 1990 - சிறந்த படத் தொகுப்பாளர்
- 1993 – சிறந்த படத் தொகுப்பாளர் – சோபனம்
விஜய் விருதுகள்
சென்னை கிழக்கு சுழற் சங்கம்
- 2017 - துரோணாச்சார்யா விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads