கரையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரையார் (Karaiyar) அல்லது குருகுலம் எனப்படுவோர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு சாதியாகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள், பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.[1][2] பெரும்பாலும் கடல் சார்ந்த தொழிலான மீன் பிடித்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிட கப்பல் கட்டி அதன் மூலம் நாடு பல கண்ட மாலுமிகளாகவும் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.[3]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோடியும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்.[3][4]

Remove ads

வரலாறு

புறநானூறு போன்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. வையாபாடல் மற்றும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்கியங்களில், இவர்கள் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.[5]

"முக்கரா ஹாட்டான" என்கிற ஒரு சிங்கள ஓலைச் சுவடியில், குருகுல வீரர்கள் முக்குவர்கலும் மற்றும் சோனகர்கலும் ஒரு மூன்று மாத போரில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடுகிறது.[6]

இந்த போரில், குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற ஒரு குடித்தலைவர் இந்த போரில் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன் செண்பகப் பெருமாள் என்பவரைத் தத்தெடுத்தார்.[7][8]

Remove ads

உட் சாதிப் பிரிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads