முக்குவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்குவர் (Mukkuvar) எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும் மீனவ சமூகத்தினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியத் தீவான இலட்சத்தீவுகளிலும் காணப்படுகின்றனர்.
இவர்கள் இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் பெரும் நிலக்கிழார்களாகவும், மத்திய காலத்தில் கூலிப்படையாகவும் செயல்பட்டனர்.[1]
Remove ads
சொற்பிறப்பு
இச்சமூகத்தின் பெயர் பல சொற்பிறப்பியல் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்றின் படி முக்குவர் என்பது தமிழ் வார்த்தையான முக்கு (முனை அல்லது மூலையில்) என்று பொருள் மற்றும் ஆர் (மக்கள்) என்ற பின்னொட்டிலிருந்து பெறப்பட்டது. ஆகவே இந்த சொல் "நிலப்பரப்பின் நுனியிலிருந்து வந்தவர்களை" குறிக்கிறது.[2] மற்றொரு கோட்பாடு படி, முக்குவன் (ஒருமை வடிவம்) என்பது திராவிட வார்த்தையான முழுகுவிலிருந்து பெறப்பட்ட "மூழ்காளர்" (மூழ்குவது அல்லது முழுக்குவது) என்று பொருள்.[3] இச்சமூகத்தினர் குகான்குலம், முர்குகன் மற்றும் முக்கியார் என பிறபெயர்களையும் பயன்படுத்துகின்றனர்.[4][5] இவர்களின் பிற பெயர்களான குகான்குலம் (குகன் குலம்) மற்றும் முற்குகன் (முதன்மையாக குகன்) என்பவை அயோத்தியிலிருந்து, கங்கையின் குறுக்கே இந்து கடவுளான ராமரை ஏற்றிச் சென்ற கடற்படையினரான குகனைப் பற்றிய இலக்கியக் குறிப்புகள் ஆகும்.[1]
Remove ads
மூலம்
வரலாற்றில் சிலர், இவர்கள் தமிழ்நாட்டு கரையோரங்களில் இருந்து கேரளாவிற்கும் இலட்சத்தீவுகளுக்கும் குடியேறினர் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கைக்குக் குடியேறி, பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி கேரளாவின் தென்மேற்குக் கரையோரங்களில் குடியேறியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் பார்க்க
உசாத்துணை
- ^ The Mukkuva law: or, The rules of succession among the Mukkuvars of இலங்கை. / By C. Brito, Imprint Colombo, H. D. Gabriel, 1876
- ^ Sri Lankan Tamil society and heritage by Prof Sivathamby
- ^ Tamils of Sri Lanka: historical roots of Tamil identity By S. K. Sitrampalam [தொடர்பிழந்த இணைப்பு]
- ^ The ancient myths of the aborigines Kerala Calling, July 2004 by Dr. M.V Vishnu Namboodiri பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads