கர்ண் சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்ண் விநோத் சர்மா (Karn Vinod Sharma (பிறப்பு: அக்டோபர் 23, 1987) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். நவம்பர் 13, 2014இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] டிசம்பர் 9, 2014 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அரிமுகமானார்.
Remove ads
உள்ளூர்ப் போட்டிகள்
2007-08 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இரயில்வே அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். அந்தத் தொடரில் சம்மு காசுமீர் அணிக்கு எதிரான போட்டியில் 232 பந்தில் 120 ஓட்டங்களை எடுத்தார். 2018-19 ஆம் ஆண்டிற்கான துலீப்கோப்பைக்கான அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[2] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே கோப்பைக்கான தொடரில் 8 போட்டிகளில் 12 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளை வீழ்த்திய ஆந்திரப் பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்தார்.[3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads