கர்நாடக மத்திய பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம் (Central University of Karnataka), என்பது இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தின் கலபுராகி மாவட்டத்தின் ஆலந்து வட்டத்தில் உள்ள கடகஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இது 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் "மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009" மூலம் நிறுவப்பட்டது[5][6]

விரைவான உண்மைகள் Other name, குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

கருநாடகா மாநில அரசால் அடையாளம் காணப்பட்ட ஆலந்து வட்டத்தில் உள்ள குல்பர்கா-வாக்தாரி மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் உள்ள நிரந்தர வளாகத்தில் பல்கலைக்கழகம் தற்பொழுது செயல்படுகிறது.[7]

பீகார், குசராத்து, அரியானா, இமாச்சலப் பிரதேசம், சம்மு மற்றும் காசுமீர், சார்க்கண்டு, கருநாடகம், கேரளம், ஒரிசா, பஞ்சாப், இராசத்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு புதிய மத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பல்கலைக்கழகங்கள் மசோதா 2009 மூலம் இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. சத்தீசுகரில் உள்ள குரு காசிதாசு விசுவவித்யாலயா, சாகர் (மத்தியப் பிரதேசம்) அரிசிங் கௌர் விசுவவித்யாலயா மற்றும் உத்தரகாண்டில் உள்ள கேமாவதி நந்தன் பகுகுனா கர்வால் பல்கலைக்கழகம் ஆகியவற்றை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றவும் இச்சட்டம் வழிவகைச் செய்தது.

Remove ads

துறைகள்

  • வணிகப் பள்ளி
    • வணிகக் கல்வித் துறை
    • பொருளியல் துறை
    • பொருளாதாரமும் திட்டமிடுதலுக்குமான துறை
  • புவி அறிவியல் பள்ளி
    • புவியியல் துறை
    • புவிக் கல்வித் துறை
  • மானுடவியல், மொழிகள் பள்ளி
    • கன்னட இலக்கியப் பண்பாட்டுத் துறை
    • ஆங்கிலத் துறை
    • இந்தி துறை
    • செம்மொழி நடுவம் - கன்னடம்
  • சமூக பழக்கவியல் பள்ளி
    • வரலாறு
    • உளவியல்
    • சமூகப் பணி
  • இளநிலைக் கல்விப் பள்ளி
    • புவியியல், உலவியல், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்
  • கணினியியல் பள்ளி
  • வேதியியல் பள்ளி
  • இயற்பியல் பள்ளி
  • பொறியியல் பள்ளி
    • கட்டிடப் பொறியியல்
    • வேதிப் பொறியியல்
    • இயந்திரப் பொறியியல்
    • மின்னனுப் பொறியியல்
    • தொலைத்தொடர்பு பொறியியல்
    • கணினிப் பொறியியல்
    • உயிரிப் பொறியியல்
    • உயிரிமருத்துவப் பொறியியல்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads