இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்

இந்தியாவின் ஒரு வகையான பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்
Remove ads

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லது மத்தியப் பல்கலைக்கழகங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன.[1] இந்தியாவில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதற்கான அதிகாரமானதுயுஜிசிக்கு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.[2] மேலும் 15 நிபுணத்துவ குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட வெவ்வேறு செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.[3] மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழக சட்டம், 2009இன் கீழ் செயல்படுகின்றன. இச்சட்டம் இவற்றின் நோக்கம், அதிகாரங்கள், ஆளுமை போன்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இச்சட்டத்தின்கீழ் 12 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன்.[4] 2020 ஜூன் 1ஆம் நாளன்று, யுஜிசி வெளியிட்டுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.[5]

Thumb
அலகாபாத் பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான மத்திய பல்கலைக்கழகம்

யுஜிசியால் கட்டுப்படுத்தப்படும் பிற வகை பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:

  • மாநில பல்கலைக்கழகங்கள்: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் மாநில அரசால் இவை நடத்தப்படுகின்றன. இவை பொதுவாக மாநில சட்டமன்ற சட்டத்தால் நிறுவப்படுகின்றன.[6][7]
  • நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது "பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது" என்பது யுஜிசியின் ஆலோசனையின் பேரில் உயர் கல்வித் துறையால் யுஜிசி சட்டம், 1956இன் பிரிவு 3இன் கீழ் வழங்கப்பட்ட சுயாட்சியின் நிலை ஆகும்.[8][9]
  • தனியார் பல்கலைக்கழகங்கள்: யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட, பட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள். ஆனால் இவர்கள் பலகலைக்கழக வளாகத்திற்கு வெளியே செயல்படும் கல்லூரிகளை, இணைக்க அனுமதிக்கப்படுவதில்லை.[10][11]

மேற்கூறிய பல்கலைக்கழகங்கள் தவிர, பட்டங்கள் வழங்கக்கூரிய தகுதியுடன் தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் செயல்படு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் கீழ் இணைவுப்பெற்ற கல்லூரிகள் ஏதும் இல்லை. இவை உயர் கல்வித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.[12] இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழினுநுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய பொறியியல் அறிவியல் தொழினுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், தேசிய சட்டப் பள்ளிகள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்பிற தன்னாட்சி நிறுவனங்களும் அடங்கும்.

Remove ads

மத்தியப் பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வுகள் 2022

2020 புதிய கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 45 மத்தியப் பல்கலைகழகங்களில் இளநிலைப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.[13]

மாநிலங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள்

இந்தியாவில் அதிக மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்ட பகுதி புது தில்லி ஆகும். இங்கு ஏழு பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. கோவா தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒன்றிய பகுதியில், தில்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

Thumb
டெல்லியில் உள்ள ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
மேலதிகத் தகவல்கள் மாநில / யூனியன் பிரதேசம், மத்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை ...
Remove ads

இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் பல்கலைக்கழகம், மாநிலம் ...
Thumb
1994இல் நிறுவப்பட்ட மத்திய பல்கலைக்கழகமான தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட வாயில்
Thumb
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்.
Thumb
உத்தரப்பிரதேசத்தின் ஐந்து மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ராச்சி ஹால் மற்றும் பல்கலைக்கழக மசூதி
Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. Granted central university status (year)
  2. Established under amendments The Central Universities (Amendment) Act, 2014[16] and The Central Universities (Amendment) Act, 2019[17]
  3. Established under The Central Sanskrit Universities Act, 2020[19]
  4. Directly funded by இந்திய அரசு and not by UGC.[26]
  5. Established under central act Nalanda University Act, 2010[27]
  6. Established by the Central Universities Act, 2009[4]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads