கர்ணாவதி பல்கலைக்கழகம்
இந்திய பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்ணாவதி பல்கலைக்கழகம் (Karnavati University) இந்தியாவின் குசராத்து மாநிலம் காந்திநகருக்கு அருகிலுள்ள உவர்சாத்து என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் [1] ஆகும். 2017 ஆம் ஆண்டின் குசராத்து தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் [2] மூலம் கர்னாவதி மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சுவர்னிம் சிடார்ட்டப் மற்றும் புதுமைப் பல்கலைக்கழகம், பிபி சவானி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரசில் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களையும் இந்த அறக்கட்டளை நிறுவியுள்ளது.
Remove ads
கல்வி
பல்கலைக்கழகம் அதன் ஆறு தொகுதி கல்லூரிகளின் மூலம் மேலாண்மை, வடிவமைப்பு, சட்டம், தாராளவாத கலைகள், வர்த்தகம், ஊடக ஆய்வுகள் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கும் படிப்புகளை அளிக்கிறது:[3]
- கர்ணாவதி பல்மருத்துவப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக வடிவமைப்பு நிறுவனம்
- ஒருங்கிணைந்த உலக சட்டப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக வணிகப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக கணக்கீட்டு நுண்ணறிவுப் பள்ளி.
- ஒருங்கிணைந்த தாராளவாத கலைகள் மற்றும் மக்கள் தொடர்பியல் பள்ளி.
Remove ads
இணைப்புகள்
கர்ணாவதி பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இப்பல்கலைக்கழகம் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads