கர்பி மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்பி மக்கள் அல்லது மிகிர் மக்கள்[3] வடகிழக்கு இந்தியாவில் உள்ள முக்கியப் பழங்குடி சமூகங்களில் ஒன்றாகும். இப்பழங்குடி மக்களில் பெரும்பான்மையோர் அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லோங் மற்றும் கிழக்கு கர்பி அங்லோங் மலை மாவட்டங்கள் அதிகம் வாழ்கின்றனர்.
Remove ads
சொற்பிறப்பியல்
கர்பி என்ற சொல்லின் தோற்றம் தெரியவில்லை. வரலாற்று ரீதியாகவும், வம்சாவளியின் அடிப்படையிலும் அவர்கள் தங்களை அர்லெங் (கர்பி மொழியில் "மனிதன்") என்றும் மற்றவர்களால் கர்பி என்றும் அழைக்கப்பட்டனர்.[4][5] மிகிர் என்ற சொல் இப்போது இழிவாகக் கருதப்படுகிறது.[6] கர்பி மொழியில் மிகிர் என்ற சொல்லுக்கு உறுதியான பொருள் இல்லை. மிகிர் என்பதன் மிக நெருக்கமான பொருள் "மேகார்" (ஆங்கிலம்: மக்கள்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறலாம்..[7]
Remove ads
கண்ணோட்டம்
கர்பி சமூகம் என்பது இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லோங் மற்றும் கிழக்கு கர்பி அங்லோங் மலை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் பழங்குடி மக்கள் ஆவார். கர்பி அங்லோங் மாவட்டங்கள் தவிர கர்பி மக்கள் வசிக்கும் பகுதிகளில் டிமா ஹசாவ், காமரூப பெருநகரம், ஹோஜாய், மோரிகான், நாகோன், கோலாகாட், கரீம்கஞ்ச், லக்கிம்பூர், சோனித்பூர் மற்றும் அசாமின் பிஸ்வநாத் சாரியாலி மாவட்டங்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பப்பும்பரே மாவட்டத்தின் பலிஜான் வட்டம்; மேகாலயாவின் ஜெயந்தியா மலைகள், ரி போய், கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு காசி மலை மாவட்டங்கள்; நாகாலாந்தில் உள்ள திமாப்பூர் மாவட்டம், வங்காள தேசததின் சில்ஹெட் மாவட்டங்களில் சிறிய அளவில் வாழ்கின்றனர். [6] மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து போன்ற பிற இந்திய மாநிலங்களில் உள்ள கர்பிகள், இந்திய அரசியலமைப்பு 'மிகிர்' என்ற வகுப்பில் வைத்திருப்பதால், தங்களை பட்டியல் பழங்குடியினராக அடையாளப்படுத்த முடியவில்லை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 4 லட்சத்து 21 ஆயிரம் (4,21,156) மக்கள் தொகையுடன், கர்பிகள் ஒரு பெரிய சமூகமாக உள்ளனர்.
Remove ads
வரலாறு
கர்பி மக்கள் பேசும் கர்பி மொழி திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கர்பி மக்களின் நாட்டுப்புறக் கதைகள் மூலம் அவர்கள் நீண்டகாலமாக காசிரங்கா பகுதிகளில் வாழ்ந்ததாக குறிக்கிறது. அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லோங் மலைப்பகுதிகளில் சிதறிக் கிடக்கும் கல் நினைவுச்சின்னங்கள், ஒற்றைக்கல் மற்றும் பெருங்கல் கட்டமைப்புகள் உள்ளது. திமாசா கச்சாரி மன்னர்களின் ஆட்சியின் போது கர்பி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டப்பட்டனர். அவர்களில் சிலர் காசி மற்றும் செயிந்தியா மலைப்பகுதிகளில் உள்ள ஜெயந்தியா இராச்சியத்தில் தஞ்சம் அடைந்தனர். அகோம் இராச்சியத்தில் தஞ்சம் அடைந்த கர்பி மக்கள் பர்மியர்களின் தாக்குதலுக்கு உட்பட்டனர். அசாம் மீது படையெடுத்த பர்மிய இராச்சியத்தினர் கர்பி மக்கள் மீது மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளை நிகழ்த்தினர். கர்பிகள் ஆழமான காடுகளிலும், உயரமான மலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். கர்பிகளில் சிலர் மேற்கு அசாமுக்கு குடிபெயர்ந்தாலும், சிலர் பிரம்மபுத்திராவைக் கடந்து வடக்குக் கரையில் குடியேறினர்.
சமயம்
பெரும்பாலான கர்பிகள் இன்னும் தங்கள் கலாச்சார மற்றும் பாரம்பரிய தாக்கங்களுடன் முன்னோர் வழிபாடு & இயற்கை வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர். மறுபிறவியில் நம்பிக்கை வைத்து முன்னோர்களை மதிக்கிறார்கள். பெரும்பாலான கர்பிகள் வைணவத்தின் மாறுபாடுகளுடன் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். கர்பி சமயம் மற்றும் நம்பிக்கை முறையின் அடிப்படையில் சடங்குகளில் மூதாதையர் வழிபாடு, வீட்டு தெய்வங்கள் மற்றும் பிராந்திய தெய்வங்களின் வழிபாடு மற்றும் இறந்த மூதாதையர்களுக்கான சடங்குகளால் ஆனது. கர்பி மக்களில் சிலர் கிறித்துவம் பயில்கின்றனர்.
Remove ads
குலம்
கர்பி மக்கள் ஒரு ஆணாதிக்க சமூகம். அவர்கள் ஐந்து பெரிய குலங்கள் அல்லது கூறுகள் கொண்டவர்கள். அவை எங்டி (லிஜாங்), டெராங் (ஹன்ஜாங்), எங்கீ (எஜாங்), டெரோன் (க்ரோன்ஜாங்) மற்றும் டிமுங் (துங்ஜாங்) ஆகியவை மீண்டும் பல துணைக் குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
திருமணம்
கர்பியில் உள்ள குலங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. வேறுவிதமாகக் கூறினால், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் சகோதர சகோதரிகளாகக் கருதப்படுகிறார்கள். உறவினர் திருமணம் (மாமியார், தாய் மற்றும் தந்தையின் பக்கம்) மிகவும் விரும்பப்படுகிறது மற்றும் காதல் திருமணமும். நவீன கர்பி சமூகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. திருமணத்திற்குப் பிறகு, மணமகனோ அல்லது மணமகனோ தங்கள் குடும்பப் பெயரை மாற்ற மாட்டார்கள். அதாவது அவர்கள் தங்கள் அசல் குடும்பப் பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அதே காரணத்தால், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. தம்பதியரின் குழந்தைகள் தங்கள் தந்தையின் குடும்பப் பெயரைப் பெறுவார்கள். வரதட்சணை என்ற கருத்து கர்பி மக்களிடத்திலும், வடகிழக்கு இந்தியாவின் பழங்குடி மக்களிடமும் இல்லை.
Remove ads
திருவிழாக்கள்
கர்பி மக்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். அவற்றில் ஹச்சா-கெகன், சோஜுன், ரோங்கர், பெங் கார்க்லி, தோய் அசோர் ரிட் அசோர் மற்றும் போடோர் கெகுர் போன்ற சில திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது. அவற்றில் சில வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்படுகிறது. பயிர்கள் விதைக்கப்படுவதற்கு பூமியில் மழை பொழியுமாறு கடவுளை வேண்டுவதற்காக போத்தோர் கேகூர் கொண்டாடப்படுகிறது. கிராம மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சனவரி 5 அல்லது பிப்ரவரி 5 ஆம் நாளன்று ரோங்கர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
Remove ads
இறப்பு
சோமாங்கன் ("தி-கர்ஹி" என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கர்பி மக்களின் இறப்புச் சடங்கு ஆகும். இது சமீபத்தில் அல்லது நீண்ட காலத்திற்கு முன்பு இறந்த குடும்ப உறுப்பினரின் ஆன்மாவின் அமைதி மற்றும் பாதுகாப்பான பாதைக்காக ஒரு குடும்பத்தால் செய்யப்படும் சடங்கு. இது இறந்த நபருக்கான இறுதி அஞ்சலியாகும். மேலும் எந்த ஒரு இறந்த ஆண்டும் மீண்டும் கொண்டாடப்படுவதில்லை.
ஆடை மற்றும் ஆபரணங்கள்
கர்பி மக்கள் தங்களுக்கென சொந்த பாரம்பரிய உடைகளைக் கொண்டுள்ளனர். பல்வேறு பொருட்கள் மற்றும் வடிவமைப்புடன் தென்கிழக்கு ஆசிய மக்களின் ஆடைகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது.
பெண்களின் பாரம்பரிய உடையில் பினி, பெக்கோக், வாம்கோக் மற்றும் ஜிசோ ஆகியவை அடங்கும். பினி என்பது ஒரு வகை கருப்பு நிற பாவாடை மற்றும் இடுப்பில் பெல்ட்டால் கட்டப்பட்டிருக்கும். இது ஜாங்ரே, சாண்டோக், ஹொங்கி ராஞ்சோம், மார்போங் ஹோம்க்ரி, அஹி செரோப், சம்புருக்ஸோ அபினி, மெக்செரெக் போன்ற பல்வேறு வடிவமைப்புகளில் இருக்கலாம். பெகோக் என்பது வலது தோளில் கட்டப்பட்ட ஒரு சதுரத் துண்டு. பே சர்பி பொதுவாக வயதான பெண்களுக்கும், பெ ஸ்லெங், பெ ஜங்போங் நடுத்தர வயது பெண்களுக்கும், பெ டுப்ஹிர்சொ இளம் பெண்களுக்கும். வாம்கோக் என்பது இடுப்பில் இறுகக் கட்டப் பயன்படும் கச்சை ஆகும். இது இரண்டு நீள முனைகளிலும் வண்ணமயமான விளிம்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அமெக்பி, அமெக்சோ, அபெர்மங், தோய்தெசூரி ஆங்பார், சுவே ஆர்வோ மற்றும் ஃபோங்லாங் ஆங்சு போன்ற வடிவமைப்புகளில் காணலாம். ஜிசோ என்பது வடிவமைப்புகளுடன் கூடிய நீண்ட கருப்பு துணி மற்றும் நீள முனையில் அலங்கரிக்கப்பட்ட விளிம்புகளை மூடுவதற்கு அணியப்படுகிறது. மார்பகங்கள் மூடுவதற்கு தற்போது இரவிக்கை ஆடை பயன்படுத்தப்படுகிறது.
ஆண்களின் உடையில் சோய், போஹோ, ரிகோங் மற்றும் சேட்டர் ஆகியவை அடங்கும். சோய் என்பது ஆண்கள் அணியும் சட்டை ஆகும். போஹோ என்பது தலையைச் சுற்றி அணியப்படுகிறது அல்லது கழுத்தைச் சுற்றி அணியப் பயன்படுத்தப்படுகிறது. ரிகோங் என்பது வேலையின் போது ஆண்கள் அணியும் இடுப்புத் துணி. சடோர் என்பது ஆண்கள் இடுப்பைச் சுற்றி அணியும் ஒரு வெள்ளை வேட்டி ஆகும்.
ஆபரணங்களைப் பொறுத்தவரை, கர்பி சமூகம் சில விதிகளைக் கொண்டுள்ளது. கர்பி பெண்கள் பொதுவாக ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அணிய அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களை விட பெண்கள் அதிக ஆபரணங்களை அணிவதால், வெள்ளி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கர்பி பெண்கள் வெள்ளியில் கழுத்தில் அணியும் ஒரு தனித்துவமான ஆபரணம் லெக் ஆகும். கர்பி பெண்களும் ரோய் என்று அழைக்கப்படும் வளையல்களை அணிவார்கள். பெண்கள் தங்கள் காதுகளை அலங்கரிக்க அணியும் ஆபரணங்கள் நோ தெங்பி என்று அழைக்கப்படுகிறது.
பொருளாதாரம்
மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் கர்பிகள் பாரம்பரியமாக ஜூம் சாகுபடியைச் செய்கிறார்கள். அதே சமயம் சமவெளிகளில் வசிப்பவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறார்கள். அவர்கள் உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீன்ஸ், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பழங்களை உள்ளடக்கிய பல்வேறு பயிர்களை வளர்க்கிறார்கள். அவர்கள் மிகவும் தன்னிறைவு பெற்றவர்கள் மற்றும் வெற்றிலை, பலா, ஆரஞ்சு, அன்னாசி, பேரிக்காய், பீச், பிளம் போன்றவற்றைக் கொண்ட வீட்டுத் தோட்டங்களைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
