கற்பகம் வந்தாச்சு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கற்பகம் வந்தாச்சு (Karpagam Vanthachu) 1993 ஆம் ஆண்டு அர்ஜுன், இராதிகா நடிப்பில், சங்கர் கணேஷ் இசையில், ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜனின் மனைவி எஸ். சியாமளா தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படம் கோமல் சுவாமிநாதன் எழுதிய மேடை நாடகமான டெல்லி மாமியார் என்பதன் தழுவல் ஆகும். இப்படம் தெலுங்கில் பெஜவாடா ரௌடி என்று மொழிமாற்றப்பட்டு வெளியானது[1][2][3][4].

விரைவான உண்மைகள் கற்பகம் வந்தாச்சு, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சக்திவேல் (அர்ஜுன்) ஓர் ஆதரவற்ற ஏழை. ரிக்சா ஓட்டும் தொழில் செய்து பிழைக்கிறான். தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு கோபப்பட்டு சண்டை போடும் குணமுடையவன். கற்பகமும் (ராதிகா) அவனும் காதலர்கள்.

இராஜா (கௌதம் சுந்தர்ராஜன்), சாரதி (ஒய். ஜி. மகேந்திரன்) இருவரும் சகோதரர்கள். சாரதி தன் மனைவி சரசுவின் (சூர்யா) சொல்லைத் தட்டாதவன். இராஜா திருமணமாகாத பிரம்மச்சாரி.

இராஜாவும் இராதாவும் (வித்யாஸ்ரீ) காதலர்கள். இராதா ஏழை வீட்டுப்பெண். ஆனால் தைரியமானவள். அவளுடைய தந்தையும் அண்ணனும் பொறுப்பற்றவர்கள். இவர்களின் திருமணத்திற்கு சாரதி சம்மதிக்கிறான். ஆனால் சரசுவின் சம்மதத்தைப் பெற சரசுவிடம் இராதாவை பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக நடிக்கச் சொல்கிறார்கள். சரசு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். இராஜா-இராதா திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு சரசுவிற்கும் இராதாவிற்கு அடிக்கடி சண்டை நடக்கிறது. டெல்லியிலிருந்து அவர்கள் வீட்டிற்கு வரும் உறவினர் மயில்சாமி (எஸ். எஸ். சந்திரன்) இவர்களுக்கு புத்திபுகட்ட ஒரு திட்டம் தீட்டுகிறார். கற்பகத்தை தன் மனைவியாக நடிக்கச்சொல்லி வீட்டுக்கு அழைத்துவருகிறார். கற்பகத்தின் சகோதரனாக சக்திவேலும் வருகிறான். இராதா - சரசு இருவரையும் கற்பகம் எப்படித் திருத்தினாள் என்பது மீதிக்கதை.

Remove ads

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், நா. காமராசன், வெங்கடேஷ் ஆகியோர் இயற்றினர்.

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads