கௌதம் சுந்தர்ராஜன்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌதம் சுந்தரராஜன் (Gowtham Sundararajan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குநர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.[1] இவர் குணச்சித்திர, நகைச்சுவை மற்றும் எதிர்நாயகன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர் கண்ணுல காச காட்டப்பா எனும் திரைப்படத்தினை 2016 இல் இயக்கினார்.[2]
Remove ads
தொழில்
கௌதம் சுந்தரராஜன் தமிழக நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சியாமலா ஆகியோருக்கு தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். விவேகானந்தா கல்லூரியில் படித்த அவர் 1989 இல் பட்டம் பெற்றார்
கே. பாலச்சந்தரின் அழகன் (1990) திரைப்படத்தில் நடித்தார். மேஜர் கௌதம் செப்டம்பர் 1996 இல் கோகிலா ஹரிராமை மணந்தார்.[3] 1998 ஆம் ஆண்டில், தனது மனைவியுடன் சேர்ந்து, சென்னையின் முதல் முறையான மேற்கத்திய நடனப் பள்ளியான அகாடமி ஆஃப் மாடர்ன் டான்ஸை நிறுவினார்.[4] இத்தம்பதிகள் கமல்ஹாசனின் நட்சத்திரம், ஆளவந்தான் (2001) ஆகிய படங்களுக்கு நடனமைத்தார்கள். ஆர். மாதவன் - ஜோதிகா நடித்த அச்சம் தவீர் உள்ளிட்ட பிற திரைப்படத் திட்டங்களில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.[5]
மேஜர் கௌதம் மணி ரத்னத்தின் இருவர் (1997) திரைப்படத்தில் தமிழ்ச்செல்வனின் உதவியாளர்களில் ஒருவராக நடித்தார். ஒரு நடிகராக, அவர் பெரும்பாலும் சுந்தர் சி மற்றும் அர்ஜுன் படங்களில் தோன்றினார். ஐந்தம் படை (2009) படத்திற்காக சுந்தர் சி உடன் தயாரிப்பாளராக மாறினார்.[6]
2016 ஆம் ஆண்டில், அரவிந்த் ஆகாஷ், அஸ்வதி வாரியர் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கண்ணுல காச காட்டப்பா திரைப்படத்தை இயக்கினார்.[7]
Remove ads
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்
- நடிகர்
- இயக்குநர்
- கண்ணுல காச காட்டப்பா (2016)
- தொடர்களில்
- மர்ம தேசம் - இயந்திரப் பறவை.
- செல்வி (2005 - 2007)
- லட்சுமி (2006 - 2008)
- செல்லமே (2009 - 2013)
- நந்தினி (2017 - தற்போது வரை)
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads