கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறந்த நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலசப்பாக்கம் (ஆங்கிலம்:Kalasapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாக அமைந்துள்ளது. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும் கலசப்பாக்கம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் கலசப்பாக்கம் KALASAPAKKAM, நாடு ...
Remove ads

அமைவிடம்

கலசப்பாக்கம் நகரம் கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் - தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடக்கே போளூர் 10 கி.மீ. தொலைவிலும், ஆரணி 35 கி.மீ. தொலைவிலும் மற்றும் வேலூர் 58 கி.மீ. தொலைவிலும், தெற்கில் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலை 26 கி.மீ. தொலைவிலும், மேற்கே செங்கம் 43 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கலசபாக்கம்-பூண்டி வருவாய் நகரில் 31,000 மக்கள் வாழ்கிறார்கள் . 

சாலை வசதிகள்

கலசப்பாக்கம் நகரில் சாலை வசதிகள் உள்ளது.

ஆகிய கலசப்பாக்கம் நகரின் வழியாக நகரத்தை இணைக்கிறது.

போக்குவரத்து வசதிகள்

வேலூர், ஆரணி, போளூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. துரிஞ்சிகுப்பம், அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, மன்சுராபாத் ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சிறப்பு

கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

நிர்வாகம் மற்றும் அரசியல்

இந்நகரம் சிறப்பு நிலை ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை ஊராட்சியாகும். இந்த நகரை கலசப்பாக்கம் ஊராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

மேலதிகத் தகவல்கள் ஊராட்சி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ...

அரசியல்

வருவாய் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் கலசப்பாக்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை போளூர் வட்டத்தின் சிலப் பகுதிகளை கொண்டு 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 52 வருவாய் கிராமங்களும், 1,40,301 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads