கலசப்பாக்கம் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலசப்பாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. .[1] இவ்வருவாய் வட்டம் போளூர் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு, மே, 2012ல் தோற்றுவிக்கப்பட்டது.[2] இவ்வருவாய் வட்டத்தின் தலைமையிடம் கலசப்பாக்கம் ஆகும். கலசப்பாக்கம் வட்டம் 52 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]
கலசப்பாக்கம் வருவாய் வட்டத்தில் கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
இந்த வட்டத்தில் கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய குறுவட்டங்கள் அமைந்துள்ளது.[http://cms.tn.gov.in/sites/default/files/gos/rev_t_257_2012.pdf&ved=2ahUKEwjnpq_Rwe7mAhVVbn0KHQpdCNQQFjALegQIBBAB&usg=AOvVaw36iProbwqLO9uHIePOrNLx%5Bதொடர்பிழந்த+இணைப்பு%5D]
Remove ads
அமைவிடம்
கலசப்பாக்கம் வட்டத்தின் கிழக்கில் சேத்துப்பட்டு வட்டம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் வட்டங்களும், மேற்கில் ஜமுனாமரத்தூர் வட்டம், வடக்கில் போளூர் வட்டம், தெற்கில் திருவண்ணாமலை வட்டம் மற்றும் செங்கம் வட்டங்களும் எல்லைகளாக உள்ளது.
திருவண்ணாமலைக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 175 கி.மீ. தொலைவிலும்; வேலூரிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும் கலசப்பாக்கம் உள்ளது.
மக்கள்தொகையியல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,40,301 ஆகும். அதில் 69,150 ஆண்களும், 71,151 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்ள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads