கலிப்பொலி போர்த்தொடர்

From Wikipedia, the free encyclopedia

கலிப்பொலி போர்த்தொடர்
Remove ads

கலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign) என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் உருசியாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது.

விரைவான உண்மைகள் கலிப்பொலி போர்த்தொடர் Gallipoli Campaign, நாள் ...

துருக்கியில் இந்நடவடிக்கை Çanakkale Savaşları (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் டார்டனெல்லாஸ் நடவடிக்கை அல்லது 'கலிப்பொலி என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது Les Dardanelles என்றும், ஆஸ்திரேலியா[6], நியூசிலாந்து[7], மற்றும் நியூபன்லாந்தில்,[8] இந்நடவடிக்கை கலிப்பொலி நடவடிக்கை அல்லது கலிப்பொலி போர் என அழைக்கப்படுகிறது.

Remove ads

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads