உதுமானியப் பேரரசு
துருக்கியப் பேரரசு (அண். 1299-1922) From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதுமானியப் பேரரசு (ஆங்கிலம்: Ottoman Empire[l] (/ˈɒtəmən/ (ⓘ))) என்பது பெரும்பாலான தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்திய ஓர் ஏகாதிபத்திய அரசு ஆகும்.[m] இது துருக்கியப் பேரரசு[24][25] என்றும் கூட அழைக்கப்படுகிறது. இது 14-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்திருந்தது. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு இடையில் தென் கிழக்கு நடு ஐரோப்பாவின் பகுதிகளையும் கூட இது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.[26][27][28]
அண். 1299-இல் வடமேற்கு அனத்தோலியாவில் துருக்கோமென் பழங்குடியினத் தலைவரான உஸ்மான் பேயால் நிறுவப்பட்ட ஒரு பெய்லிக் அல்லது வேள் பகுதியிலிருந்து இப்பேரரசானது உருவானது. அவருக்குப் பின் பதவிக்கு வந்தவர்கள் பெரும்பாலான அனத்தோலியாவை வென்றனர். 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் பால்கன் குடாவுக்குள் விரிவடைந்தனர். தங்களது சிறிய இராச்சியத்தை கண்டங்களில் பரவியிஇருந்த ஒரு பேரரசாக மாற்றினர். இரண்டாம் மெகமுது தலைமையில் 1453-ஆம் ஆண்டு கான்சுடான்டினோப்பிலைக் கைப்பற்றியதுடன் பைசாந்தியப் பேரரசை உதுமானியர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். கான்சுடான்டினோப்பிலில் (நவீன கால இசுதான்புல்) தங்களது தலைநகரத்துடன் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி மீதான கட்டுப்பாட்டுடன் உதுமானியப் பேரரசானது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான தொடர்புகளின் மையத்தில் ஆறு நூற்றாண்டுகளுக்கு அமைந்திருந்தது. ஏராளமான மக்களை ஆட்சி செய்த இந்தப் பேரரசு அதன் பல மனமுவந்த சமூகங்கள் அல்லதும் மில்லெத்துகளுக்கு இசுலாமியச் சட்ட முறைமையின் அடிப்படையில் அவர்களது சொந்த விவகாரங்களைப் பேணுவதற்கு வேறுபட்ட அளவிலான சுயாட்சியை வழங்கியது. முதலாம் செலிம் மற்றும் முதலாம் சுலைமானின் ஆட்சிக் காலங்களின் போது உதுமானியப் பேரரசானது ஓர் உலக சக்தியாக உருவானது.[29]
முதலாம் சுலைமானின் இறப்பிற்குப் பிறகு உதுமானியப் பேரரசானது ஒரு வீழ்ச்சிக் காலத்துக்குள் நுழைந்தது என்று ஒரு காலத்தில் எண்ணப்பட்ட அதே நேரத்தில் 18-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதிக்குள்ளும் ஒரு நெகிழ்வான மற்றும் வலிமையான பொருளாதாரம், சமூகம் மற்றும் இராணுவத்தைப் பேரரசானது தொடர்ந்து பேணி வந்தது என நவீன கல்வியாளர்கள் ஒத்த கருத்துக்கு வருகின்றனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகளில் உதுமானியர்கள் இராணுவத் தோல்விகளை அடைந்தனர். நிலப்பரப்பு இழக்கப்படுவதில் இது முடிவடைந்தது. அதிகரித்து வந்த தேசியவாதத்துடன் பால்கன் பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புதிய அரசுகள் உருவாகத் தொடங்கின. 19-ஆம் நூற்றாண்டின் டான்சிமாத் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து உதுமானிய அரசானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், உட்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் உருவானது. 1876-ஆம் ஆண்டு புரட்சியில் அரசானது அரசியலமைப்பு முடியாட்சிக்கு மாற முயற்சித்தது. பெரும் கிழக்குப் பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் அப்துல் அமீதின் கீழ் ஒரு அரச குடும்ப சர்வாதிகாரத்துக்கு மாறியது.
Remove ads
பெயர்
உதுமானிய துருக்கிய மொழியில் பேரரசு என்பது தவ்லத் ஏ ஆலிய்யிஏ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه) அல்லது உஸ்மான்லி தவ்லத்தீ (عثمانلى دولتى) என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.நவீன துருக்கி மொழியில் இது 'Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்திய பதிவுகளில் இது "ஒத்தமான்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரட்டையாக எழுதும் இம்முறை 1920-1923 காலப்பகுதியில், அங்காரா நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் அன்றிலிருந்து துருக்கி(Turkey) என்ற தனித்த சொல் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
Remove ads
வரலாறு
எழுச்சி (1299-1453)

துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழ்ந்த அனத்தோலியா பகுதி ஒரு சீரற்ற சுதந்திரப் பிரதேசமாகப் பிரிந்ததுடன் பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள் (Ghazi Emirates) என அழைக்கப்பட்டன. இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால் (1258[30] –1326) நிர்வகிக்கப்பட்டது. உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒத்மான்ன் என்ற பெயர் பெறப்பட்டு பின்னர் அது ஒத்தமான் என அறியப்பட்டது.
முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஃபல்கேன் வழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன் உர்ஹான் 1324இல் பூர்சா நகரைக் கைப்பற்றியதுடன் அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வடமேற்கு அனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசிடம் (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது.
1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் சிலுவைப்படை எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை.
ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கம் கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் நோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
விரிவாக்கம் மற்றும் உச்சநிலை (1453–1566)
இரண்டாம் முராத் என்பவரின் மகனான இரண்டாம் முகம்மத் ஆட்சிப் பிரதேசத்தையும் இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன் 29 மே 1453 அன்று கான்ஸ்டண்டினோப்பிள் நகரைக் கைப்பற்றினார். உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி கிறிஸ்தவ தேவாலயங்களை அவற்றின் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு இரண்டாம் முகம்மத் அனுமதி வழங்கினார். ஏனெனில் ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கும் இறுதி பைசாந்திய இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.[31]
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசு ஒரு விரிவடையும் காலத்தினுள் நுழைந்தது. இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன் ஆட்சிப் பொறுப்புத் திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் வந்தது. உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகள் வழியாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.[32]
சுல்தான் முதலாம் சலீம் (1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இஸ்மாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச் செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.[33] முதலாம் சலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன் கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலைநிறுத்தினார். உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித் தன்மை போர்த்துக்கேய பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் துவங்கியது.[34]

முதலாம் சுலைமான்(1520-1566) 1521இல் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினார், ஹங்கேரி பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டன.[35] 1526இல் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றி பெற்ற பின்னர் இன்றைய ஹங்கேரி (மேற்குப் பகுதி தவிர்ந்த) ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பேரரசின் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர் என்றாகி மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டதுடன் பேரரசின் சக்தி வாய்ந்த கடற்படை ஒன்று மத்திய தரைக்கடலின் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.[36]
தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827)
1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக ஸ்டீபன் லீ கூறுகிறார். இடையிடையே சில காலங்களில் மீண்டு வருவதும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகக் கடுமையான நிலையை அடைந்தது.[37] பல வரலாற்றாளர்கள் இக்கூற்றை மறுத்தாலும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற போர்க் கருவிகள்' பற்றாத படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" ஆகிய காரணிகள் ஒத்தமான் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர்.[38] தலைமையின் தோல்வியே முதன்மையான காரணம் எனக் கூறும் லீ 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள் இருவரைத் தவிர மற்றோர் ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர் என்கிறார் இவர்.[39] மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர். உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாமல் இருந்தன.[40][41] இறுதியாக உதுமானியப் பொருளாதாரம் சீர் குலைந்தது. போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் போன்றவை பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன.[42]
வீழ்ச்சியும் நவீனமயமாக்கலும் (1828–1908)

டான்சிமாத் காலத்தில் (1839–1876) அரசு மேற்கொண்ட தொடர் சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன. வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது. ஓரினச் சேர்க்கை குற்றமற்றதாக ஆக்கப்பட்டது. சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.[43] கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.[44][45]
சாமுவெல் மோர்சுக்கு தந்தி கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.[46] இதனையடுத்து முதல் தந்தி தடம் இஸ்த்தான்புல் (கான்ஸ்டான்டினோப்பிள்) - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.[47] இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு சார்ந்த அரசு இரண்டு ஆண்டுகளே நீடித்தது.
உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முஸ்லிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர். இது முஸ்லிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.[48] 1861இல் உதுமானியக் கிறிஸ்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன. இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.[48][48] 1911இல் இஸ்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில் 528 கிரேக்க இனத்தவர்களுக்கு உரிமையாக இருந்தன.[48]

பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே கிரீமியப் போர் (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகஸ்டு 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளை வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெற்றது.[49][50] மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர்.[51] காக்கேசியப் போர்களின் இறுதியில் 90 விழுக்காடு காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[52] இதனால் காக்கேசியாவின் வடக்கில் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமானியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர்.[53][54][55] சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக பதினைந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.[56]

1876இல் பல்கேரிய எழுச்சியின்போது 100000 பேர் கொல்லப்பட்ட பாசி-பசூக்.[57] 1877-78இல் நடந்த ரஷ்ய-துருக்கிப் போரில் ரஷ்யா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது. பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. ரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் மொண்டெனேகுரோவும் விடுதலை பெற்றன. 1878இல் ஆஸ்திரியா-ஹங்கேரி தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொஸ்னிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன.
பெர்லின் பேராயத்தில் பால்கன் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட பிரித்தானியப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரைலி உதவினார். இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு சைப்ரஸ் வழங்கப்பட்டது.[58] உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாகக் கூறி 1882இல் எகிப்திற்கு படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது.
1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 3 லட்சம் வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.[59]
இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் ஃபால்கனிய முஸ்லிம்கள் ஃபால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.[60] 1923இல் அனடோலியா மற்றும் கிழக்கு திராஸ் ஆகியவை மட்டுமே முஸ்லிம் பகுதிகளாக இருந்தன.[61]
தோல்வியும் கலைப்பும் (1908–1922)

சனஜூலை 3, 1908இல் இளந்துருக்கியர் புரட்சிக்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்பு சார்ந்த அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் திருத்தி அமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.
குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே ஆஸ்திரியா-ஹங்கேரி 1908இல் பொஸ்னியா எர்செகோவினாவைக் கைப்பற்றியது. ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா லிபியாவை இழந்தது. ஃபால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தன. இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திராஸ் தவிர பால்கன் நிலப்பகுதிகளை இழந்தது உதுமானியப் பேரரசு. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகரமான எடிர்னேயையும் இழந்தது. மதம் சார்ந்த கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 4 லட்சம் முஸ்லிம்கள் தற்காலத் துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் வாந்திபேதி கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.[62] 1821 முதல் 1922 வரை ஃபால்கன் நாடுகளில் நடைபெற்ற முஸ்லிம் இன அழிப்பில் பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பலர் வெளியேற்றப்பட்டனர்.[63][64][65] 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் ஒன்றரை கோடி மக்கள் தற்கால துருக்கியிலும் 45 லட்சம் மக்கள் சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானிலும் 25 லட்சம் மக்கள் ஈராக்கிலுமாக வாழ்ந்திருந்தனர். இது தவிர 55 லட்சம் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.[66]
நவம்பர் 1914இல் மைய சக்திகள் தரப்பில் உதுமானியப் பேரரசு முதல் உலகப் போரில் பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியப் பேரரசுக்கு கலிப்பொலி போர்த்தொடர் போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் ரஷ்யாவிற்கு எதிராக காக்கஸ் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.[67]

1915இல் ரஷ்யப் படைகள் பழைய ஆர்மீனியாவினுள் நுழைந்தன.[68] இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது. இது ஆர்மீனிய இனப்படுகொலை என அறியப்படுகின்றது.[69] கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின.[70]
1916இல் ஏற்பட்ட அரபுப் புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 90 லட்சம் துருக்கிய-முஸ்லிம் அகதிகள் காக்கேசியா, கிரீமியா, பால்கன் குடா, நடுநிலக் கடல் தீவுகளிலிருந்து அனத்தோலியாவுக்கும் கிழக்கு திராசிற்கும் இடம் பெயர்ந்தனர்.[71]
கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்றுகையும் இஸ்மீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. முஸ்தபா கமால் தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் முகம்மது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் துருக்கி குடியரசை நிறுவியது. மார்ச் 3, 1924இல் கலீஃபகமும் கலைக்கப்பட்டது.[72]
Remove ads
உதுமானிய சுல்தான்கள் பட்டியல்
Remove ads
குறிப்புகள்
- İslâm Ansiklopedisi: "It is disputed when the Ottomans conquered this place; Various dates have been put forward in this regard, such as 1361, 1362, 1367 and 1369. Among these, the opinion that Edirne was captured in 1361 as a result of a systematic conquest policy by Murad and Lala Şahin, while Orhan Gazi was still alive, gains prominence. However, it has also been stated that the date of conquest may have occurred after 1366 (1369), based on an elegy showing that the city metropolitan Polykarpos was in Edirne in this capacity until 1366.[4]
- In Ottoman Turkish, the city was known by various names, among which were Ḳosṭanṭīnīye (قسطنطينيه) (replacing the suffix -polis with the Arabic suffix), Istanbul (استنبول) and Islambol (اسلامبول, பொருள். full of Islam); see Names of Istanbul). Kostantiniyye became obsolete in Turkish after the proclamation of the Republic of Turkey in 1923,[5] and after Turkey's transition to Latin script in 1928,[6] the Turkish government in 1930 requested that foreign embassies and companies use Istanbul, and that name became widely accepted internationally.[7]
- வழிபாட்டு மொழி; அரபி பேசிய குடிமக்கள் மத்தியில்
- Decrees in the 15th century.[16]
- Foreign language among educated people in the post-டான்சிமாத்/late imperial period.[17]
- In 1922, the Ottoman Empire came to an end with the abolition of the monarchy, and Abdülmecid, a member of the Ottoman dynasty, was elected caliph by the Grand National Assembly of Turkey to replace the last sultan Mehmed VI and held the title under the Ankara Government (1922–1923) and the Republic (1923–1924).
- The Treaty of Sèvres (10 August 1920) afforded a small existence to the Ottoman Empire. On 1 November 1922, the Grand National Assembly (GNAT) abolished the sultanate and declared that all the deeds of the Ottoman regime in Constantinople were null and void as of 16 March 1920, the date of the occupation of Constantinople under the terms of the Treaty of Sèvres. The international recognition of the GNAT and the Government of Ankara was achieved through the signing of the Treaty of Lausanne on 24 July 1923. The Grand National Assembly of Turkey promulgated the Republic on 29 October 1923.
- Ottoman Turkish: دولت علیهٔ عثمانیه, romanized: Devlet-i ʿAlīye-i ʿOsmānīye, lit. 'Sublime Ottoman State'; Turkish: Osmanlı İmparatorluğu or Osmanlı Devleti; French: Empire ottoman[17]
- The Ottoman dynasty also held the title "caliph" from the Ottoman victory over the எகிப்தின் மம்லுக் சுல்தானகம் in Ridaniya (1517) to the abolition of the Caliphate (1924) by the Grand National Assembly of Turkey.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads