1915
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1915 (MCMXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி - யாழ்ப்பாணம் முழுவதும் ஒரு வகை காய்ச்சல் பரவியதில் பலர் இறந்தனர்.
- ஜனவரி 12 - ஐக்கிய அமெரிக்காவின் கீழவை பெண்களுக்கு வாக்குரிமை வழங்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
- ஜனவரி 13 - இத்தாலியில் அவெசானோ நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 31 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யர்களுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
- மே 7 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக் கப்பலினால் லூசித்தானியா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 22 - ஸ்கொட்லாந்தில் மாபெரும் தொடருந்து விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 28 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
- ஜூலை 28 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.
- ஆகஸ்ட் - யாழ்ப்பாணம் மண்டை தீவுக் கடலில் படகொன்று மூழ்கியதில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 12 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் இருந்து கூட்டுப் படைகள் தப்புவதற்கு உதவியமைக்காக பிரித்தானிய தாதி எடித் சாவெல் என்பவர் ஜேர்மனியரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 15 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.
- டிசம்பர் 22 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
Remove ads
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
- த புரோசிடிங்ஸ் ஆஃவ் த நேஷனல் அக்காடமி ஆஃவ் சயன்சஸ் இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 2 - குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (இ. 2014)
- மார்ச் 15 - அழகு சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1973)
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - வில்லியம் ஹென்றி பிராக், வில்லியம் லோரன்ஸ் பிராக்
- வேதியியல் - ரிச்சார்ட் வில்ஸ்டாட்டர்
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - ருமேயின் ரோலண்ட்
- அமைதி - வழங்கப்படவில்லை
1915 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads