கலி யுகம்

From Wikipedia, the free encyclopedia

கலி யுகம்
Remove ads

இந்து தொன்மவியலில், கலி யுகம் அல்லது கலி ஆண்டு (Kali Yuga) ஒரு யுக சுழற்சியில் நான்கு யுகங்களில் (உலக யுகங்கள்) நான்காவதும், குறுகியதும், மோசமானதும் ஆகும். இது துவாபர யுகத்திற்கு அடுத்ததும், அடுத்த சுழற்சியின் கிருத (சத்ய) யுகத்திற்கு முந்தியதும் ஆகும். மோதல்களும் பாவங்களும் நிறைந்த தற்போதைய யுகம் என்றும் இது நம்பப்படுகிறது.[1][2][3]

Thumb
ராஜா இரவிவர்மா வரைந்து "கல்கி அவதாரம்" ஓவியம்

புராணங்களின்படி,[a] கிருட்டினணின் இறப்பு துவாபர யுகத்தின் முடிவையும் கலியுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது கிமு 17/18 பெப்பிரவரி 3102 தேதியிடப்பட்டது.[9][10] 432,000 ஆண்டுகள் (1,200 தெய்வீக ஆண்டுகள்) நீடிக்கக்கூடிய கலியுகம் 5,126 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, பொஊ 2025-இல் 4,26,874 ஆண்டுகள் மீதமுள்ளது.[11][12][13] கலியுகம் பொஊ 428,899 இல் முடிவடையும்.[b]

இன்றைய கலி யுகத்தின் முடிவில், நற்பண்புகள் மிக மோசமாக இருக்கும் போது, கல்கியால் நிகழும் என்று முன்னறிவிக்கப்பட்ட அடுத்த சுழற்சியில் புதிய கிருத (சத்திய) யுகம் தொடங்கும்.[14]

Remove ads

நான்கு யுகங்கள்

இந்நான்கு யுகங்களின் காலவரையாக கூறப்படுபவை:

  • கிருதயுகம் - 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
  • திரேதாயுகம் - 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்
  • துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்
  • கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.

தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் என இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக சிரீமண் மகாபாகவதம் முதல் °கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது. பொ.ஊ.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக[15] பொ.ஊ. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார் குறிப்பிடுகிறார். கலியுகம் பொ.ஊ.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் வராகமிகிரர் என்னும் மற்றொரு வானியலார். சிரீயுக்தேசுவர் என்பவர் இந்த 4,32,000 ஆண்டுகள் கணக்கையே தவறானதாக கூறுகிறார். அவரது கூற்றுப்படி கலியுகத்திற்கு 2400 ஆண்டுகள் (1200 ஆண்டுகள் இறங்குமுகம், 1200 ஆண்டுகள் ஏறுமுகம்); தவிர தற்போது நடப்பது துவாபர யுகம்.[16]

Remove ads

கலியுக இயல்புகள்

கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:

  • அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர்.
  • மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.
  • ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.
  • திருமணம் அவரவர் விருப்பப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.

கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான "கலி"யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. கிருட்டிணன் பூமியை விட்டு வெளியேறிய நாள் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய நாள் என்று பாகவதம் (புராணம்) (1.18.6),[4] விஷ்ணு புராணம் (5.38.8),[5] பிரம்மாண்ட புராணம் (2.3.74.241),[6] வாயு புராணம் (2.37.422),[7] பிரம்ம புராணம் (2.103.8)[8] ஆகியன குறிப்பிடுகின்றன.
  2. கணக்கீடுகள் சுழியம் ஆண்டைத் தவிர்த்துவிடும். கிமு 1 முதல் கிபி 1 வரை ஒரு ஆண்டு, இரண்டு அல்ல.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads