கல்கணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்கணர் (Kalhana, Kalhan, கல்ஹானர்) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதர் ஆவார். கி பி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்ஹானர், 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதிய இராஜதரங்கிணி (மன்னர்களின் ஆறு) எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் (தரங்கம் எனில் அலை) எனும் அத்தியாயங்களுடன் கூடியது.
சமசுகிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான இராஜதரங்கிணி ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றை கூறுவதுடன், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது.[1]
Remove ads
வாழ்க்கை
கல்ஹானர், லோகரா வம்ச காஷ்மீர் மன்னர் ஹர்சர் அமைச்சரவையில் பணியாற்றிய சன்பக்கா என்பவரின் மகனாவர். காஷ்மீர் பண்டிதர் குலத்தில் பிறந்த கல்ஹானர் சமசுகிருத மொழி அறிஞரும், கவிஞரும் ஆவார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads