சூத்திரகர்
இந்திய மன்னர் மற்றும் நாடகாசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூத்திரகர் (Shudraka) (IAST: Śūdraka) பரத கண்டத்தில் கிபி நான்காம் நூற்றாண்டில், உஜ்ஜைன் நாட்டை ஆண்ட மன்னரும், சமஸ்கிருத மொழி நாடக ஆசிரியரும் ஆவார்.[1][2] மன்னர் சூத்திரகர் மிருச்சகடிகம் (The Little Clay Cart), வாசவதத்தை (Vinavasavadatta), பாணர் (bhana) (short one-act monologue), மற்றும் பத்மபிரபிரித்தகா (Padmaprabhritaka).[2] போன்ற சமஸ்கிருத நாடகங்களையும் இயற்றியவர் ஆவார்.[3]
மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் " மிருச்சகடிகம்" நாடகம், மன்னர் சூத்திரகரால் கிபி நான்காம் நூற்றாண்டில் இயற்றபப்ட்டது.[4]
Remove ads
சூத்திரகரின் சிறப்புகள்
மன்னர் சூத்திரகர் அஸ்வமேத யாகத்தை முடித்து, தமது 110வது வயதில், தன் மகனுக்கு முடிசூட்டியப் பின்னர் காடுறை வாழ்க்கை மேற்கொண்டவர். சூத்திரகர் ரிக் வேதம், சாம வேதம், கணக்கியல், காமசாஸ்திரம் கற்றதுடன், காட்டு யாணைகளை பிடித்து, பயிற்சி அளித்து, அவைகளை யாணைப்படையில் சேர்க்கும் கலையை அறிந்தவர் .[5]
சூத்திரகர் இயற்றிய மிருச்சகடிகம் எனும் நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டும், நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் மிருச்சகடிக நாடகத்தை தமிழில் அரங்கேற்றியுள்ளார்.
இந்தியவியல் அறிஞரான பார்லே பி. ரிச்சர்டு, சூத்திரகர் என்பது தொன்மவியல் பெயராக இருக்கும் என்றும், மிருச்சகடிக நாடக நூலின் ஆசிரியர் இதுவரை எவராலும் அறியப்படவில்லை எனக் கூறுகிறார்.[5] கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈஸ்வரதாசின் தந்தையான இந்திராணி தத்தா அல்லது சிவதத்தன் எனும் ஆபிர நாட்டு மன்னரின் புனை பெயரே சூத்திரகர் எனச் சில பண்டைய வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.[6][7]
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads