கல்யாண் குமார்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

கல்யாண் குமார்
Remove ads

கல்யாண் குமார் (Kalyan Kumar, 28 சூலை 1928 - 1 ஆகத்து 1999)[2] என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் ஒரு இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் முதன்மையாக நடித்துள்ளார். நடசேகரா (1954) என்ற புராண நாடகப்படத்தில் அறிமுகமான கல்யாண் குமார், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும்.

விரைவான உண்மைகள் கல்யாண் குமார், பிறப்பு ...

கல்யாண் குமார், அமரசிற்பி ஜகனாச்சாரி (1963) திரைப்படத்தின் வழியாக வண்ணப் படத்தில் நடித்த முதல் கன்னட நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.[3] குமார் 1960கள் மற்றும் 1970களில் கன்னட திரைப்படங்களில் ராஜ்குமார், உதயகுமார் ஆகிய இரு நடிகர்களுடன் மூன்றாவது நடிகராக ஆதிக்கம் செலுத்தினர்.[4] நடிகர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது கடினமாக இருந்த நேரத்தில், கல்யாண் குமார் கன்னட திரைப்படங்களில் மட்டுமல்லாது, தமிழ் திரைப்படங்களிலும் முத்திரையைப் பதித்தார். கல்யாண் குமார் உதயகுமார், ராஜ்குமார் ஆகிய மூவரும் கன்னட திரையுலகில் "குமார திராயர்" (மூன்று குமார்கள்) என்று அழைக்கப்பட்டார்.[5]

Remove ads

துவக்ககால வாழ்க்கை

கல்யாண் குமார், பிரித்தானிய இந்தியாவின், மைசூர் இராச்சியத்தின், பெங்களூரில், 1928, சூன், 7 அன்று தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார். சொக்கண்ணா என்கிற சம்பத் குமாராக பாட்டனார் பெயரை இவருக்கு இவரது தந்தை சூட்டினார். இவரது பெற்றோர் இவரை மருத்துவராக்க விரும்பினர். ஆனால் தனக்கு நடிப்பில்தான் ஆர்வம் உள்ளது என்பதை தன் பெற்றோருக்கு தெரிவித்தார். இவர் பெங்களூரில் இருந்தால் திரைப்படம், நாடகம் என்று கெட்டுவிடுவார் என்று பம்பாயில் இருந்த செராமிக்ஸ் இன்ஸ்டியூட்டில் இவரது தந்தை சேர்த்துவிட்டார்.[6]

ஆனால் அங்கே பயின்ற இரண்டு ஆண்டுகளும் படிப்பில் கவனம் செலுத்தாமல் திரைப்பட நிறுவனங்களில் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அங்கு மதராசி என்று கூறி புறக்கணிக்கப்பட்டார்.[6]

Remove ads

தொழில்

பம்பாயில் திரைப்பட வாய்ப்புகிடைக்காத குமார், படிப்பை முடித்து பெங்களூர் திரும்பினார். பெங்களூர் பைன் ஆர்ட்ஸ் அசோசியேசனில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பம்பாயில் கல்யாண் குமார் புறக்கணிக்கபட்ட கதையைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. ராஜு கல்யாண் குமார் திரைப்பட வாய்ப்புக்காக பம்பாயில் அலைந்து திரிந்த கதையையே திரைக்கதையாக எழுதச் செய்து ஒரு நடிகன் உருவான கதையை கன்னடத்தில் நடசேகரா என்ற பெயரில் படமாக எடுத்தார்.[7] சேர்ந்து 1954 இல் வெளியான கன்னட மொழித் திரைப்படமான நடசேகராவில் (1954) கல்யாண் குமார் நாயகனாக அறிமுகமானார். ஜெ. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, அத்தை வித்யாவதி ஆகியோருக்கு ஜோடியாக இவர் நடித்தார். இப்படமே திரைப்பட உலகம் குறித்து கன்னடத்தில் வெளியான முதல் படமாகும். இவரது தாயார் கல்யாணியம்மாவின் பெயரில் உள்ள முதல் பாதியில் உள்ள கல்யாண் என்பதை எடுத்து கல்யாண் குமார் என்ற திரைப்பெயரை ஏற்றார்.

1965 ஆம் ஆண்டு மாவன மகளு, 1966 ஆம் ஆண்டு படுகுவா தாரி ஆகிய படங்களில் ஜெ. ஜெயலலிதாவுடன் கதாநாயகனாக நடித்தார். கன்னடத்தின் முதல் முழு நீள வண்ணப் படமான அமரசில்பி ஜகனாச்சாரியில் இவர் நடித்தார், அதில் இவர் சிற்பக்கலையில் சிறந்த ஒரு வரலாற்று நபரான ஜகனாச்சாரி வேடத்தில் நடித்தார்.

Remove ads

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads